Get real time update about this post category directly on your device, subscribe now.
மதன் ரவிச்சந்திரன் ஊடக நெறியாளர் இவரை தெரியாத ஊடகங்களும் இல்லை வலது இடதுசாரி பார்வையாளர்களும் இல்லை. நடுநிலையோடு பேசுவதினால் இவரை சங்கி என அழைக்க ஆரம்பித்தார்கள். பாண்டே...
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைப்பற்றி பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதற்கு பதில் பலமான விமர்சனங்கள்...
2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது. பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி (41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.
அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக அஞ்சல் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை, கட்டணமின்றி அளித்து வருகிறது. ஏடிஎம் அட்டை: கட்டணமின்றி வழங்கப்படும் இந்த ஏடிஎம்...
கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார். அவர் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாட்டில் மின்சார வாகனங்களுக்கு விரைவில் மாறவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India (FAME India) ஃபேம் இந்தியா திட்டம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது இரண்டாவது ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த பட்ஜெட் உதவி ரூ.10,000 கோடி. இந்த இரண்டாவது கட்டத்தில் 7090 மின்சார பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களை தயாரிக்க 38 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் விவரம் இணைப்பு -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. * ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
1914 - 1918 ஆம் ஆண்டு நடந்த முதலாம் உலகப் போருக்குப் பின்னர், தேச பக்தர்கள், நமது நாட்டிற்கு சுதந்திரம் வேண்டி, தங்களுடைய போராட்டத்தை தீவிரப் படுத்தினர்....
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று...
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி...
2022ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் அனுப்புதல் தற்போது நடைப்பெறுகிறது. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க, 2021 செப்டம்பர் 15ம் தேதி கடைசி தேதி. பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், பத்ம விருது இணையதளத்தில் https://padmaawards.gov.in ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். பத்ம விருதுகளை, மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள்/ பரிந்துரைகள் பத்ம விருதுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அவை, அந்தந்த துறையில் சாதனை புரிந்த/ சேவையாற்றிய நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பில் கீழ் உள்ளன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பத்ம விருதுகள் இணையதளத்தில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://padmaawards.gov.in/AboutAwards.aspx விவரங்கள் மற்றும் உதவிக்கு, இந்த போன் எண்களை தொடர்பு கொள்ளவும்: 011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்" என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் 'சமரசம்' என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்றபடி,...
