செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டைவிட சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி. 2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி. இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி.  கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள்  தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி. கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. https://www.youtube.com/watch?v=gW2_uspZpgY உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி. கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி. இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள்  721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய்  602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி  254.39 சதவீதம். இந்திய வேளாண்  பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது....

திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு  போடும் ஸ்டாலின் ஏன்  கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….

மக்களை காப்பாற்ற தவறிய ஸ்டாலின்! உலக அளவில் கப்பலேறிய தமிழக மானம்! யார் இந்த ஸ்டாலின் தற்போது வைரல் !

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது. பிரசாந்த் கிசோர் உதவியால் இது முடிந்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக...

முதலில் சொன்னதை செய்யுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் காட்டம்!

முதலில் சொன்னதை செய்யுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் காட்டம்!

தமிழக பா.ஜ.க விவசாய அணி சார்பில், சென்னை பாஜக தலைமை அலுவலத்தில் கமலாலயத்தில் முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் மற்றும் ஆக்ஜிசன் செறிவூட்டும் கருவி...

விண்ணை முட்டிய கட்டுமான பொருட்களின் விலை! விடியல் காணுமா கட்டுமான துறை !

விண்ணை முட்டிய கட்டுமான பொருட்களின் விலை! விடியல் காணுமா கட்டுமான துறை !

கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், கம்பிகள், செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளது அதிலும் சிமெண்ட், கம்பிகள் விலை அதிகமாக உயர்ந்து உள்ளது. ஒரு...

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்புதல்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்புதல்.

பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு ஜூன் 8-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. புதுதில்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (சிஎஸ்எம்சி) 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்துக்கொண்டன. பயனாளிகள் கட்டுமானம் மற்றும் குறைந்தவிலை வீட்டுவசதிக் கூட்டாண்மை மூலம் இந்த வீடுகளைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY மேலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா, ‘பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்ட விருதுகள்- 100 நாட்கள் சவாலையும்’ அறிமுகப்படுத்தினார். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி, ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகை செய்வதில் சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படும். கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது நடைபெற்ற முதலாவது சிஎஸ்எம்சி கூட்டம், ‘அனைவருக்கும் வீடு' என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உறுதியான வீடுகளைக் கட்டித்தரும் அரசின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டித் தரும் பணியை நாடுமுழுவதும் நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. “ஒப்புதல் வழங்குவதற்கான கோரிக்கை அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் நிறைந்துள்ளது. உபயோகப்படுத்தப்படாத நிதியை முறையாகப் பயன்படுத்தி, உரிய காலத்திற்குள் திட்டங்களை நிறைவடையச் செய்வதில் நாங்கள் தற்போது அதிக கவனம் செலுத்துகிறோம்”, என்று திரு துர்கா சங்கர் மிஸ்ரா கூட்டத்தின்போது தெரிவித்தார். நில விவகாரம், இடவியல் பிரச்சினைகள், நகரங்களுக்கு இடையே இடப்பெயர்ச்சி, முன்னுரிமை மாற்றம், உயிரிழப்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தடங்கல் ஏற்பட்டுள்ள திட்டங்களை மாற்றியமைக்குமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொண்டன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 112.4 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, சுமார் 82.5 லட்சம் வீடுகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 48.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு/ உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் மொத்த முதலீடான ரூ. 7.35 லட்சம் கோடியில் மத்திய அரசின் உதவி, ரூ.1.81 லட்சம் கோடியாகும். இதில் ரூ. 96,067 கோடி நிதி வழங்கப்பட்டுவிட்டது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டிய ஆறு கலங்கரை விளக்கத் திட்டங்கள் பற்றி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் வலியுறுத்தினார். இந்தக் கலங்கரை விளக்கத் திட்டங்கள், சென்னை, அகர்தலா, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட் மற்றும் இந்தூரில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

DMK சமீப காலமாக திமுகவிற்கு தமிழக பாஜக திமுகவிற்கு குடைச்சலை தர ஆரம்பித்துள்ளது அரசியல் வட்டராங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி...

தமிழகத்தில் மின் தடைக்கு தடை போட்டது மோடி  அரசு ! தி.மு.கவின் நிர்வாக குளறுபடிகளால் தான் மின்தடை ஏற்படுகிறது!

தமிழகத்தில் மின் தடைக்கு தடை போட்டது மோடி அரசு ! தி.மு.கவின் நிர்வாக குளறுபடிகளால் தான் மின்தடை ஏற்படுகிறது!

மின்வெட்டு ஆங்காங்கே வரத்தொடங்கி உள்ளது.இப்போது தமிழகத்தில் பல இடங்களில் இது தொடர்கிறது. கோடைக்காலத்தில் வீட்டு உபயோகத்திற்கு மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. இதுவும்நிர்வாகம குளறுபடிதான். திமுக ஆட்சியில் எல்லா...

தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்!  அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை!

தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! அமைச்சரின் பதிலால் எழுந்த சர்ச்சை!

திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து அமைச்சர்கள்களின் செயல்கள் திமுக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள். இதை திமுக தலைவர் எவ்வாறு கையாள போகிறார் என்பது...

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை..

திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பங்குபெற்று பிரபலம் அடைந்த செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திராவிட முன்னேற்ற...

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.  இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ●        தென்மேற்கு பருவமழை,  இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது.  மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Page 245 of 370 1 244 245 246 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x