Get real time update about this post category directly on your device, subscribe now.
ஆப்பிரிக்காவில் இருந்து தபால் பார்சல் மூலமாக போதைப் பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை சுங்கத்துறைக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு, கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து வந்த 5 பார்சல்கள் கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்டன. பூந்தொட்டிகள் என தெரிவிக்கப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, 11 மர குவளைகள் வெள்ளை நிற பேப்பரில் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது, இளஞ்சிவப்பு நிற பாலீத்தின் கவரில் காட் போதை இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குவளைகளிலிருந்து மொத்தம் 46.8 கிலோ காட் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.17 கோடி. இந்த கடத்தல் தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும், 27 வயது ஏரோனாட்டிக்கல் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ‘கேதேயுடுலிஸ்’ எனப்படும் இந்த காட் இலைகள் ‘மிரா’ எனவும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஏமனில் விளைவிக்கப்படும் ஒருவித போதைத் தரும் இலை வகையாகும். கடந்தாண்டு மார்ச் மாதம், ரூ.40 லட்சம் மதிப்புள்ள 15.6 கிலோ காட் இலைகளை, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்தது. அவை எத்தியோப்பியாவில் இருந்து வந்தது. இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போடப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 13.54 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை மொத்தம் 13,54,78,420 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 31 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. ...
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு (AFMS) முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்துள்ள மருத்துவ தேவையை சமாளிக்க, ராணுவ மருத்துவமனைகளில் குறைந்த கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, 2021 டிசம்பர் 31ம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பை வழங்க பாதுகாப்புத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் 238 மருத்துவர்களுடன் ராணுவ மருத்துவ சேவைகளின் பலம் அதிகரிக்கும்.
மத்திய அரசிற்கு நன்றி ! கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன்...
சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு...
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சோலார் பேனல் அமைத்துத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், சரிதா நாயர். கேரளாவில்...
தடுப்பூசி போட்டுக் கொள்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து கொண்டிருகிறது என்பதே நிம்மதியான விசயம்தான்… தடுப்பூசி போட்டு கொள்வதை தள்ளிப்போடுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல்தான்...
உண்மையில் இந்தியா முதல் அலை கொரோனாவில் மாபெரும் வெற்றி அடைந்தது, தடுப்பு மருந்தும் கண்டறிந்து அசத்தியது பின் ஊடகங்களின் பொய்களை நம்பி போராளிகளின் பதாகைகளை நம்பி கொரோனா...
கோவை தெற்குத் தொகுதியில் பாஜக தாமரை சின்னத்தில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் கண்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் இந்த பெருந்தொற்று சமயத்தில் காணவில்லை.போன தேர்தலில்...
தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது தோனிக்கு கம்பீர் புகழாரம். ஐபிஎல் 2021, போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் சென்னை அணி பழைய சென்னை அணியாக...
