Get real time update about this post category directly on your device, subscribe now.
அரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘‘மற்ற துறையைப் போல், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய துறை அரசியல், இதில் இளைஞர்கள் பங்கேற்பது முக்கியமானது’’ என கூறினார். https://www.youtube.com/watch?v=pmLlhQg05rs ‘‘நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது” என்று இளைஞர்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார். நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை. வாரிசு அரசியலால் ஏற்படும் தீங்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஊழலை சந்தித்து வந்த மக்களுக்கு, அது சுமையாக மாறிவிட்டது என அவர் கூறினார். குடும்பத் தொடர்பை விட நேர்மைக்குத்தான் நாடு முன்னுரிமை அளிக்கிறது என்றும், நல்ல பணிகள்தான் முக்கியம் என்பதை வேட்பாளர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும் என அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்பதைக் காப்பதற்காக வாரிசு அரசியல்வாதிகள் செயல்படுவதால், ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. ‘‘வம்சாவழி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை.... வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்’’ என பிரதமர் கூறினார். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்றும், அவர்களின் வருகை வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் என பிரதமர் அறிவுரை கூறினார். ‘‘ நமது ஜனநாயகத்தை காக்க, நீங்கள் அரசியலில் சேர்வது அவசியம். சுவாமி விவேகானந்தர் உங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அவரது உத்வேகத்துடன், நமது இளைஞர்கள் அரசியலில் சேர்ந்தால், நாடு பலப்படும்’’ என திரு நரேந்திர மோடி கூறினார். ஆனால் இதுவோ தமிழக அரசியலில் வாரிசு அரசியலை தொன்று தொட்டு...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=18&v=o-3k36-Bt7E&feature=emb_logo ஸ்ரீவில்லிபுத்தூரை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக இளைஞரணி செயலாளரும், அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
சென்னையில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்...
தமிழகத்தின் அநாகரிக பேச்சுக்களை தொடங்கி வைத்ததே திராவிட கும்பல்கள் என்பது முக்கால உண்மை அதுவரை அவையில் பேசுதல் பொதுஇடத்தில் பேசுதல் என்பதில் பலமரபுகள் இருந்தன, பாரத கண்டத்து...
சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் களங்களில் இருந்து வரும் செய்திகள் அதிமுக கூட்டணி ஏறு முகத்தை நோக்கியும் திமுக கூட்டணி இறங்கு...
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிஜேபியை காரணம் காட்டி திமுக தன்னுடை ய கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்சினையை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால்...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர...
சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பிறக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும், அதிமுக...
தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினையும், திமுகவையும் விரட்டி விரட்டி வெளுத்துள்ளது அதிமுக தரப்பு. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”திமுகவுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. கருணாநிதிக்கு கடன் பிரச்னை கழுத்தை நெரித்தது. கோபாலபுரம் வீடே அவரது கையை விட்டுப் போவது போலிருந்தது. அவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர். நடித்து உதவினார். இதுதான் வரலாறு. கடனிலிருந்து மீண்ட கருணாநிதியின் குடும்பம் இன்று மிக மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளது. இது எப்படி சாத்தியமென்றால் எல்லாமே ஊழல் பணம். ஊழல் பணம். ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். திமுகவுக்கு ஏழரை துவங்கிவிட்டது. அதனால்தான் அவர் தொண்டாமுத்தூருக்கு வந்து வம்பிழுத்துள்ளார். திமுகவின் கதையை இந்த தேர்தலோடு மக்கள் முடித்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இந்துக் கடவுள்களை பழித்துவிட்டு, இந்துக்களிடமே ஓட்டுக்களை வாங்குவதற்கு நாடகமாடி வருகிறது திமுக. மக்கள் ஏமாந்துவிடக்குடாது.” என்று விளாசித் தள்ளினார். இதே கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியாவோ ”மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவதென்றால் அங்கே மக்கள்தானே இருக்க வேண்டும். அம்மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதுதானே ஸ்டாலினின் கடமை. ஆனால் தன் கட்சிக்காரர்களை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு மக்கள் கிராம சபை! என்று அதை சொன்னால் எப்படி ஏற்க முடியும்? கேள்விகேட்ட பெண்ணை அடித்து விரட்டியதன் மூலம் ஸ்டாலினின் தைரியம் புரிந்துவிட்டது. இவரெல்லாம் முதல்வராகவே முடியாது என்று அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி, ஆட்சியான திமுகவுக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.” என்று ஆவேசம் காட்டினார். ஆக மொத்தமா சேர்ந்து முடிச்சுட்டாங்க!
