மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது பிசிசிஐ இந்தாண்டு ஐபில் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு கடும் போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு இந்திய விளையாட்டு அமைப்பு ஒரு உள்நாட்டு போட்டியை வெளிநாடுகளுக்கு மாற்றும்போது, ​​அதற்கு முறையே உள்துறை, வெளியுறவு மற்றும் விளையாட்டு அமைச்சகங்களிலிருந்து அனுமதி தேவைப்படுகிறது.
இந்த ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுருந்தது இதற்கு மத்திய அரசு முறையான ஒப்புதல் அளித்துள்ளது என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துயுள்ளார்.

ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சர்

கடந்த 2018- ஆம் ஆண்டு சீனாவின் விவோ நிறுவனம் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஷராக பிசிசிஐ- யுடன் ஒப்பதம் செய்தது. ஆண்டுக்கு ரூ. 440 கோடி மதிப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 2100 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது . அதன்படி, 2023- ஆம் ஆண்டு வரை விவோவுடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா சீனா எல்லை லடாக்கில் கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், ஐ.பி.எல் தொடருக்கு சீன நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஷராக இருக்க கூடாது என்று சர்ச்சை எழுந்தது. இதனால், ஐ.பி.எல் தொடரில் டைட்டில் ஸ்பான்ஷராக இருந்த சீன நிறுவனம் விவோ விலகியுள்ளளது .

பதஞ்சலி, ஜியோ, அமேஸான் , டாடா குழுமம் , ட்ரீம் லெவன் , மற்றும் பைஜூஸ் ஆகியவைகிடையே ஐ.பி.எஸ் டைட்டிள் ஸ்பான்ஷருக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version