இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வந்தார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் சில தேச தேசத்திற்கு எதிராக செயல்படகூடியவர்கள். இவர்கள் இந்தியாவை பற்றி தவறாக பேச பயன்படுத்தியது சமூகவலைதளங்கள் ஆகும். அதை அப்படியே செய்தியாக மாற்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வந்தார்கள்.
அவர்கள் ஒளிபரப்பிய செய்திகள் உண்மை தன்மை குறைந்தும் சாதி மத கலவரம் தூண்டும் வகையிலும் அமைந்தது இது போன்ற செய்திகள் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் செயல்பட இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்றார்கள். மேலும் இதே போல் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்கள் தான் பொறுப்பு என புதிய சட்ட விதிகளை விதித்தது மத்திய அரசு.
இதே போல் திரை துறை நெறிப்படுத்தும் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டம் , இந்தியாவில் திரைத் துறையை நெறிப்படுத்தும் சட்டமாக இருந்து வருகிறது. இதில், நான்கு திருத்தங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்களுக்கு அடிப்படை, சினிமா துறையில் நடைபெறும் பல்வேறு விதமான திருட்டுகளை கட்டுப்படுத்துவது தான் என்று தெரிவிக்கிறது இந்த மசோதா.
தற்போது திரைப்படங்கள், யு, யு/ஏ மற்றும் ஏ என்று பகுக்கப்படுகின்றன. இதில், யு திரைபடங்களை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். ஏ திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.
இதில், யு/ஏ சான்றிதழை, வயது வாரியாக பகுப்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யு/ஏ 7+, யு/ஏ 13+ மற்றும் யு/ஏ 16+ என்று பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓ.டி.டி., தளங்களில் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் அதிகமான பின், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே, யு/ஏ சான்றிதழ் மேலும் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திருத்தம், நேரடியாக சினிமா திருட்டு சம்பந்தப்பட்டது. இதற்காக, 6ஏஏ என்ற தனிப்பிரிவு இணைக்கப்பட உள்ளது.
அதன்படி, எந்த வகையிலும், எந்த இடத்தில் இருந்தும், படத்தின் இயக்குனரது எழுத்துபூர்வமான அனுமதியின்றி, படத்தின் ஒரு சில பகுதிகளோ, முழு படமோ, ஒலி – ஒளிப்பதிவு செய்யப்படக் கூடாது. அப்படி செய்யப்பட்டால், மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்த தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் உண்டு.
மூன்றாவது திருத்தம், தணிக்கை சான்றிதழின் காலம் தொடர்பானது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ், 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதை காலம் முழுதும் செல்லுபடியாகும் சான்றிதழாக வழங்குவதற்கான திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான நான்காவது திருத்தம் தான், திரைத்துறையினர் கலங்க செய்துள்ளது தற்போது ஒரு திரைப்படத்துக்கு, தணிக்கை குழு சான்றளித்து, திரையரங்குகளுக்கு வந்த பின், அதை மத்திய அரசு திருத்த முடியாது.இதை மாற்றி அமைத்து அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு.
இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ, அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பாதிக்கும் விதமாக. பொது அமைதி, கண்ணியம், அறநெறியை குலைக்கும் விதமாகவோ; நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் விதமாகவோ உள்ளடக்கம் இருப்பதாக புகார் வருமானால், திரையரங்கத்தில் ரிலீஸாகி இருந்தாலும், அந்த சினிமாவை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழு தலைவருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலாம். என திறத்தப்பட்டுள்ளது.
சில காலமாகவே, தமிழ் திரைப்படங்கள் இந்து மதத்திற்கு எதிராகவும், ஜாதி, மதம் மோதல்கள் அதிகமாகவும், பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில், நிறைய தவறானக் கருத்துக்களை, காட்சி படுத்துவது, நாம் அனைவரும் அறிந்ததே.
2020 ஆம் ஆண்டில் வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில், அம்மன், மற்றொரு இந்து மதக் கடவுளான பெருமாள் மீது கோபம் கொள்வது போலவும், பெரும்பான்மையான பக்தர்களை கொண்ட இந்து மத சாமியார்களை கேலியாக, தவறாக சித்தரிப்பது போலவும் நிறைய காட்சிகள் இருந்தது.
2017 ஆம் ஆண்டில் வெளிவந்த “மெர்சல்” திரைப்படத்தில், ஜி.எஸ்.டி. (G.S.T.) பற்றி தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது, அது மிகப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மற்ற மதங்களின் மனம் புண்பட்டால் காட்சிகள் நீக்கப்படும்:2006 ஆம் ஆண்டில் வெளிவர இருந்த, “டா வின்சி கோட்” (Da Vinci Code) என்ற திரைப்படம், கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பதால், இன்னும் வெளி வராமலேயே நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது. 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த, “துப்பாக்கி” என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் மனது புண்படும் வகையில், சில காட்சிகள் இருந்ததாக, இஸ்லாமிய அமைப்புகள் போராடின. பின்னர், பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, சில காட்சிகள் நீக்கப்பட்டு, படம் வெளி வந்தது.
2013 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளி வந்த “விஸ்வரூபம்” என்ற திரைப்படத்தில், சில காட்சிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக, இஸ்லாமியர்கள் போராடினார்கள். அதன் காரணமாகவே, அவர்களின் மனது புண்படும் காட்சிகள் நீக்கப்பட்டு, பின்னர் வெளியிடப் பட்டன.புரட்சி செய்கிறேன் என இந்தியாவை பற்றி தவறாக சித்தரிக்கும் நோக்கில் படம் வந்தால் அந்த படம் தடை செய்யப்படும். ஆக இனி தமிழகத்தில் பல சினிமாக்கள் வெளி வராது.. என்பது மட்டும் நிதர்சனம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















