பிக்பாஸ் பல பேருக்கு வாழ்வு கொடுத்துள்ளது. அதில் ஒருவர் மீரா மிதுன். எப்போதும் வாய் பேசி வம்பில் மாட்டி பிரபலமானவர். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சர்ச்சை பேச்சுக்களை பேசி திரையில் வருவார். இந்த புரட்சி நாயகி மீரா மிதுன்
2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவர் மோசடி செய்து பட்டம் வென்றதாக தேர்வு குழுவிற்கு தெரியவர அவருக்கு கொடுத்த பட்டம் பறிக்கப்பட்டது
ஒரு வாரத்திற்கு முன்னர் தனது ஆண் நண்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பட்டியிலனத்தவரை இழிவாக பேசி வெளியிட்ட மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்தது.புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராக, மீரா மிதுனுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அளித்திருந்தனர்.
இந்நிலையில், தன்னை யாரும் கைது செய்திட முடியாது என்றும், அது கனவில்தான் நடக்கும் என்று காவல் துறையினருக்கு சவால் விடும் விதமாக மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் மீதான அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர்களை பற்றி அவதூராக பேசியது , கொலை மிரட்டல் விட்டது ,பண மோசடியில் ஈடுப்பட்டது உள்ளிட்ட வழக்குகளும் கேரள மக்களை அவதூறாக பேசிய வழக்கும் நிலுவையில் உள்ளது . துணை நடிகையாக வாய்ப்பு கிடைக்காத மீரா மிதுன் தனது யூடியூப் சேனல் பிரபலமடைவதற்காக தொடர்ந்து இப்படி பேசிவரும் பேச்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















