ஆந்திர மாநிலத்தில்,முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தற்போதைய முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சந்திரபாபு பேசியதாவது: திருப்பதி கோயில் நமது புனிதமான கோயில்களில் ஒன்று. இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பிரசாதங்கள் தரமற்று இருந்தன. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.