உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து இண்டிகோ 6இ66 என்னும் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஜாஹிர் உசைன் (35) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்ததில் அவரது உடலில் 390 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 16.81 லட்சம் மதிப்பில் 329 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















