சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் 836 கிராம் தங்கப் பசையை, 3 பொட்டலங்களாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 722 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.36.52 லட்சம்.
இதையடுத்து மணிகண்டன் சங்கர் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்