பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட் வேகத்தில் பறக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. 267 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.வட மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது திமுக, அதிமுக,காங்கிரஸ்,விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுஒருபக்கம் இருக்க,திமுக கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டாலும் கூட்டணி கட்சிகளுக்கும் சரி திமுகவிற்கும் திருப்தி இல்லாமல் தான் இந்த தொகுதி பங்கீடு முடிந்துள்ளது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியினுள் பெரும் புயலை கிளப்பியுள்ளது தொகுதி பங்கீடு முடிவுகள். வி.சி.கவினர் கோபம் அனைத்தும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது திரும்பியுள்ளது.
திமுக கூட்டணியில் சிதம்பரம் தனி மற்றும் விழுப்புரம் தனி ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தான் அந்த கட்சியினுள் மிகப்பெரும் புயலை கிளப்பியுள்ளது. விசிக திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு கோரிக்கை வைத்தனர் ஆனால் அதனை காதில் கூட வாங்கி கொள்ளவில்லை திமுக. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது விசிக அதையும் புறக்கணித்து தள்ளியது திமுக. இறுதியாக இரண்டு தனித் தொகுதிகள் தான் வி.சி.கவிற்கு என அழுத்தம் திருத்தமாக திமுக கூறியது. அதற்கு ஓகே சொல்லி கூட்டணியில் கையெழுத்து போட்டுள்ளார் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தை கட்சியினர் 40 தொகுதிகளிலும் வேலை செய்யவேண்டும் ஆனால் நமக்கு தொகுதி 2 தானா என கொந்தளிக்க தொடங்கியுள்ளார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தை பார்த்து கூட ஏன் நமக்கு இந்த நிலைமை என மனக்குமுறல்களை வெளிப்படுத்த தொடங்கிவிட்டர்கள். 2009ல் இரண்டு சீட்டு2014ல் இரண்டு சீட்டு2019ல் இரண்டு சீட்டு 2024லும் இரண்டு சீட்டு தான்… என விடுதலை சிறுத்தை கட்சியை விழுப்புரம் சிதம்பரம் கட்சி என மாற்றிவிட்டார்கள் திராவிட கட்சிகள் இந்த முறை தேர்தல் வேலை செய்ய கூடாது என கட்சியின் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை கேட்டு பெறுவதற்காக விசிக தொண்டர்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்கு முதல் நாள் வரை அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத் தமிழன் ஆவேசமாக செய்தியாளர்களிடம் கொந்தளித்து இருந்தார்.ஆனால் அவரோ இரண்டு தனித் தொகுதிகளுக்கு மேல் உங்களுக்கு எதுவும் கிடையாது என்று திமுக கூறிவிட்ட பின்பு இந்த முடிவு எங்களுக்கு மன வருத்தம் தருகிறது என மனக்குமுறலை கொட்டி தீர்த்துவிட்டார்
மேலும் அதிமுக அல்லது பாஜக கூட்டணி சென்று தோற்றிருந்தால் கூட 4 சீட் அதிகமாக வாங்கி இருக்கலாம் பொது தொகுதியும் கிடைத்திருக்கும் நமது அடையாளம் மாற்றப்பட்டு தமிழகத்தில் புதிய பரிமாணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பயணித்திருக்கலாம். திருமாவளவன் வெற்றி பெற்றால் போதும் என்ற நினைப்புடன் திமுகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார் என கூறிவருகிறார்கள் இதை பாஜக தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளது.
கடந்த தேர்தலிலே சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இறுதிக்கட்டம் வரை சென்றுதான் வெறும் 3 ஆயிரத்து 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.மேலும் திருமாவளவன் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. பின்ன குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருமாவளவன். தற்போது தமிழகத்தில் தேர்தல் களமானது சற்று மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்களை யாத்திரை களத்தை மாற்றியது. மேலும் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக தமிழகத்தில் 2ம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் திருமாவளவனுக்கு போட்டியாக பாஜக சார்பில் கட்சியின் பட்டியலின மாநில தலைவர் தடா.பெரியசாமி களமிறக்கப்படுவர் என்பது உறுதியாகி உள்ளது.தடா.பெரியசாமி பல போராட்டங்களை நடத்தியுள்ளார்,அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பிக்கவும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர். திமுகவுக்கு எதிராக முரசொலி அலுவலகம் குறித்து வழக்கு தொடுத்தவரும் தடா பெரியசாமி அவர்கள் தான். முரோசொலி வழக்கானாது இன்றும் நடைபெற்று வருகிறது. இது திமுகவினரையே அதிர்ச்சி அடைய செய்தது .
விழுப்புரம் தனி தொகுதியானது கடலூர்,பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை அடங்கிய தொகுதி ஆகும். இப்பகுதிகளில் வன்னியர் மற்றும் பட்டியிலன மக்கள் அதிகமாக இருக்கும் தனி தொகுதியாக உள்ளது. திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் களமிறங்குகிறார். கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவனால் வெற்றி பெற முடிந்தது.அதிமுகவை பொறுத்தவரை இன்னும் வேட்பாளரை தேர்வு செய்யாமல் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுவதாக அப்பகுதி நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளார்கள்.
திமுக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் காட்சிகளின் நிர்வாகிகள் திருமாவளவனுக்கு எதிராகவோ அல்லது வேலை தேர்தல் பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம் என தெரிகின்றது.இதனைப் பயன்படுத்த பாஜக வியூகம் அமைத்துள்ளது.
அது மட்டும் இன்றி தற்பொழுது பாஜக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால் இந்த முறை தடா பெரியசாமியை களமிறக்கினால் அதிருப்தியில் உள்ள விசிகவினரை தன் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் தடா பெரியசாமி விசிக நிர்வாகிகளிடையே நல்ல தொடர்பில் இருப்பவர் என்பதால் விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாம்,இந்த முறை திருமா வீழ்த்தப்படுவர் பாஜக வேட்பாளர் தடா பெரியசாமி வெற்றியடைவார் என கள நிலவரமும் கூற ஆரம்பித்துவிட்டதால் உற்சாகத்தில் உள்ளார்கள் தமிழக பாஜகவினர்.