மறுபடியும் தன் சிக்ஸர் காமெடியினை தொடங்கிவிட்டார் முதலவர் மு.க ஸ்டாலின்.

மறுபடியும் தன் சிக்ஸர் காமெடியினை தொடங்கிவிட்டார் மு.க ஸ்டாலின் அன்னார் கீழடியில் கிடைத்த பொருளில் இருந்து உலகின் முதல் நாகரீகம் தமிழன் நாகரீகம் என கண்டுகொண்டாராம், அதை நெல்லையில் 15 கோடியில் கட்டடம் கட்டி காப்பாற்றுவாராம்.

ஏற்கனவே நெல்லையில் ஒரு மியூசியமும், மதுரை நாயக்கர் மஹால் இன்னொரு மியூசியமாகவும் உள்ளது குறிப்பிடதக்கது, ஆனால் இவர் புதிதாகத்தான் கட்டுவாராம்சரி இத்தோடு முடித்தால் இதில் என்ன காமெடி?தமிழனின் நாகரீகத்தை இத்தோடு விடமாட்டாராம், ஆதிச்சநல்லூரில் தோண்டுவாராம் அதன் பின் எகிப்தில் இருந்து இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா, வியட்நாம் என எங்கெல்லாமோ தோண்டுவாராம்.

உண்மையில் இதெல்லாம் ஏற்கனவே இந்திய அரசின் அனுமதியுடன் ஏற்கனவே அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் இனி இவர் ஆராய்ச்ச்சி செய்ய வேண்டும் என்றாலும் மத்திய அரசுதான் அனுமதி பெற்றுதரவேண்டும், நான் தமிழ்நாட்டு முதல்வர் இதோ தமிழ்நாட்டு பாஸ்போர்ட் என்றெல்லாம் அன்னார் செல்ல முடியாது உண்மையில் ஸ்டாலினுக்கு தமிழர் பண்பாடு வரலாற்றுமேல் ஆசை இருந்தால் ஹரப்பா மொகஞ்சதாராவில் செய்யலாம், அவற்றுக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு உண்டுதான்.

ஆனால் அதை செய்யமாட்டார்ஏன் தமிழனின் உண்மையான நாகரீகம் பூம்புகார் கடல் அடியே உள்ளது, அதை அகழ்ந்தால் மிகபெரிய வரலாறு வெளிபடும், அதையும் செய்யமாட்டார்.

ஆக “இருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி” என உலகம் முழுக்க தமிழனை தோண்ட கிளம்பிவிட்டார் ஸ்டாலின் சரி, நாமும் ஒரு ஆலோசனை சொல்வோம் உலகின் ஒரு நாட்டில் காவிரி, கொற்கை, முசிறி, மதுரை இன்னும் சங்ககால பெயர்கள் எல்லாம் உண்டு, தமிழகத்தில் இல்லாத ஆனால் தொல்காப்பியர் எழுதிய ஒட்டகம் கூட அங்குதான் உண்டு என்பதால் அந்நாடுதான் தமிழரின் தாய்பூமி என்றொரு ஆய்வு கூட உண்டு.

அந்த நாட்டின் காவ்ரி எனும் பெயர்தான் கோரி என அதாவது கோரி முகமது என திரிந்தது என்பார்கள் ஆம், அந்நாடு ஆப்கானிஸ்தான், இதனால் தமிழக முதல்வர் தன் ஆராய்ச்சியினை அந்த நாட்டில் உடனே தொடங்குவது நல்லது, அநேகமாக அது திராவிட தமிழரின் தாய்பூமியாக இருக்கலாம், தாலிபன்களுக்கும் திமுகவினருக்கும் இடையேயான ஒற்றுமை அதை அழகாக சொல்கின்றதுஸ்டாலினார் ஆப்கானிஸ்தானிலும் ஆய்வுகளை உடனே தொடக்குவது நல்லது

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version