உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டம் ஒழுங்கை மீறும் அனைவரின் மீதும் தயவு தாட்சனை இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்.மேலும் மத மோதல்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
வழிபாட்டுத்தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மக்களுக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரையடுத்து அவற்றை முறைப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத்தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை அதிகாரிகள் அகற்றினர்.
அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் ஏகமனதாக ஒலிபெருக்கியின் ஒலியைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஜன்ம பூமியில் உள்ள ஒலிபெருக்கி கடந்த 20ம் தேதி அகற்றப்பட்டது.குறிப்பிடத்தக்கது. இதன் மேலும் ஒலிபெருக்கி அகற்றதின் மூலம் மத கலவரம் ஏற்படலாம் என்று எண்ணிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
‘மைக்’குகள் பயன்படுத்த தடை இல்லை; எனினும், வளாகத்திற்கு வெளியே சத்தம் கேட்காமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். இதனால், மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என அம்மாநில மாநில சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















