சீனாவும் உலகசுகாதார அமைப்பும் கூட்டாளிகள்! ஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

உலகத்தை ஆடி படைத்து வரும் கொடிய நோய் கொரோனா. இதுவரை இந்த கொரோனவால் 42 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.சுமார் 2.80 லட்சம் மக்கள் பலியாகி உள்ளார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் 67 ஆயிரம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 2 ஆயிரம் பேர் கொரோனவால் உயிர் இழந்துள்ளார்கள். இந்த கொடிய கொரோனா சீனாவின் வூஹானில் இருந்து பரவியது இந்த கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

முக்கியமாக ஐரோப்பிய நாடுகளை ஆட்சி செய்து வருகிறது இந்த கோரோனோ வைரஸ். அதுமட்டுமில்லமல் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலகமே இந்த நோயால் திணறி வருகின்றன. கொரோனா தொற்று குறித்த தகவல்களை சீனா உலக நாடுகளிடம் மறைத்து விட்டதாக தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியுதவியையும் நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் மற்றும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுப்பதை தாமதப்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாசெஸிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்ததாக ஜெர்மனை சேர்ந்த டெர் ஸ்பீகல் என்ற நாளிதழ் உளவுத்துறை அறிக்கையை சுட்டிகாட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் சீனாவில் வர்த்தகம் செய்வது குறித்து உலக நாடுகள் யோசித்து வருவதும் குறிப்பிட தக்கது

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version