தேவையில்லாமல் பல முனைகளில் பிரச்சினையைக் கிளப்பியதால் உண்டான சிக்கல் ஒருபுறம், கோவிட் தாக்கம், அதனால் உண்டான பொருளாதார நெருக்கடிகள், விடாத மழையின் காரணமாக அணைகள் நிரம்பி பாதி சீனா நீரில் மூழ்கியிருப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பியதால் உண்டான வேலை இழப்புகள், பொருளாதார நெருக்கடி, கடன் வாங்கிய நாடுகள் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க மறுப்பது, ஏகப்பட்ட பணத்தைக் கொட்டித் துவக்கிய ‘ஒன்-பெல்ட்-ஒன்-ரோட்’ மற்றும் “சீபெக்” போன்ற புராஜெக்ட்டுகள் முடங்கிக் கிடப்பது, அதற்கும் மேலாக உள் நாட்டுச் சீனர்களின் அதிருப்தி என்று நாலாபக்கமும் இடிவாங்கித் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது சீனா.
ஜின்-பிங் போன்ற முட்டாள் அதிபரை உலகம் இதுவரை கண்டதில்லை. தன்னை சீனாவின் வாழ் நாள் அதிபராக நியமித்துக் கொண்டதுடன், தனக்குப் பிடிக்காத, தனக்குப் போட்டியாக வரக்கூடிய, தன்னை எதிர்க்கிற அத்தனைபேர்களையும் ஒழித்துக் கட்டிய ஜின்-பிங் சந்தேகமில்லாமல் சீனாவின் வலிமை மிக்க அதிபர் என்பதில் சந்தேகமில்லை.
மாவோவிற்குப் பிறகு அதிக வலிமை பெற்ற சீனத் தலைவர் ஜின்-பிங்தான் என்றாலும் உலக அரசியல் குறித்தான அவரது தவறான முன் முடிவுகள், சீனாவை உலக வல்லரசாக நினைத்துக் கொண்டு கண் மூடித்தனமாக எல்லோரையும் எதிர்ப்பது சீனாவைப் பெரும் சிக்கலில் தள்ளியிருக்கிறது.
சீனாவுக்கு ஆதரவான நாடுகள் என்று எதுவுமில்லை. பாகிஸ்தான், இன்றைய புதிய நண்பனான இரானைத் தவிர்த்து. அந்த இரண்டு நாடுகளையும் காசு கொடுத்து தான் சீனாவால் வளைக்க முடிந்தது என்பதினை கவனிக்க வேண்டும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பகைத்துக் கொண்டதுடன் நிற்காமல் தேவையில்லாமல் இந்தியாவையும் பகைத்துக் கொண்ட ஜின்-பிங் ஒரு அடிமடையன் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து மோடி சீனாவுடன் நட்புறவு கொள்ள மிகவும் மெனக்கெட்டார். ஏறக்குறைய பதினேழு முறைகள் ஜின்பிங்கும், மோடியும் சந்தித்திருக்கிறார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்னால் மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தியது நினைவிருக்கலாம். இப்படி எல்லாப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க மோடி முனைந்து கொண்டிருந்த காலத்தில் சீனா அவரது முதுகில் பலமுறை குத்தியது. அதனையும் பொறுத்துக் கொண்டார் மோடி.
கடைசியில் சாது மிரண்ட கதையை கடந்த இரண்டு மாதங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
1962-ஆம் வருடப் போரில் சீனா இந்தியாவின் ஒரு பகுதியைப் பிடித்து அதற்கு “அக்சாய்-சென்” எனப் பெயர் சூட்டித் தன்னுடன் வைத்துக் கொண்டது. இந்த அக்சாய்-சென் பகுதியில் சீனா உடனடியாக சாலைகளை அமைத்துத் தன் பிடியை இறுக்கிக் கொண்டது. அதற்கு நேரெதிராக இந்தியப் பகுதியில் சீனாவை ஒட்டி சாலை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. காரணம் காங்கிரஸ் களவாணிகளின் சீனா குறித்தான அச்சம்.
சீனாவை எதிர்த்து எதுவும் செய்ய கூடாது, சொல்ல கூடாது என்பதினை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்கள் காங்கிரஸ் களவாணிகள். சீனா அத்து மீறும்போதெல்லாம் அவன் கால்களில் விழுந்து கெஞ்சினார்கள். சீனன் சிரித்துக் கொண்டே அவர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
மோடி வந்த பிறகு அது அத்தனையும் மாறியது. சீனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் சீனாவை ஒட்டிய எல்லைப் புறத்தில் சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து கொண்டிருந்தது. சீனர்கள் அதனை நிறுத்தப் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. எனவே பெரும் எரிச்சலில் இருந்தார்கள். காங்கிரஸ் களவாணிகளைப் போல பயந்து ஓடாமல் மோடி அரசு அவர்களை எதிர்த்து நின்றது.
பூடானிலும், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் போன்ற பகுதிகளில் சீனர்கள் ஊடுருவ முயன்றதை இந்தியா வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது.
லடாக் பகுதியில் இந்தியா அமைத்துக் கொண்டிருக்கும் சாலை மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் பிடியிலிருக்கும் அக்சாய்-சென் பகுதிக்கு மிக அருகில் செல்லும் அந்தச் சாலை போர்க்காலத்தில் இந்தியப் படைகளை மிகத் துரிதமாக அங்கு கொண்டு வந்து சேர்க்கும். எனவே சீனா அச்சமடைய ஆரம்பித்தது.
அங்கிருந்து சீனா-பாகிஸ்தானின் சீபெக் வழித்தடத்தை முடக்கிப் போடலாம் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் இந்தியா அக்சாய்-சென் பகுதியைப் பிடித்து விடலாம் என்பது. அப்படிச் செய்வதற்கான அத்தனை உரிமைகளும் இந்தியாவிற்கு உண்டு என்பதுவும், அதனைச் செய்வதற்கு மோடி தயங்கமாட்டார் என்பதுவும் சீனாவின் அச்சத்தை மேலும் தூண்டியது.
எனவே கல்வான் பகுதியில் வேண்டுமென்றே பிரச்சினையைக் கிளப்பினார்கள். அப்படிச் செய்தால் இந்தியா பயந்து போய் சாலை பணிகளைக் கிடப்பில் போட்டு விடும் என்று எண்ணினார்கள் சீன ஜெனரல்களும், ஜின்-பிங்கும். ஏனென்றால் இந்தியா அப்படித்தான் இதற்கு முன்னர் நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை இந்தியா அவர்களை எதிர்த்து நின்றது. அதிர்ந்து போன சீனர்கள் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் சாக்கு என்று இந்தியா நவீன ஆயுதங்களை உலகமெங்கிலும் இருந்து வாங்கிக் குவித்து விட்டது. லடாக் பகுதியின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டு சீனாவை நடுங்க வைத்து விட்டது இந்தியா.
ஏனென்றால் அந்தப் பகுதியில் போர் வந்தால் இந்தியாவிற்குத்தான் நிச்சயமான வெற்றி கிடைக்கும். பூகோள ரீதியான அமைப்பு அப்படி. சீனாவின் வல்லரசுக் கனவினை இந்தியா தகர்த்து விட்டது என்றால் மிகையில்லை. சீனா ஒரு வெத்து வேட்டு என்று உலகிற்கு உணர்த்தி விட்டது இந்தியா.
அதற்கும் மேலாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு சீனாவின் கடல்வழிக்கு ஆப்பு வைக்கத் தயாராக நிற்கிறது இந்தியா. எனவே பொறியில் அகப்பட்ட எலியைப் போல ஜின்-பிங்கும், சீன கம்யூனிஸ்ட்டுகளும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா தொடுத்த பொருளாதாரத் தடைகள் சீனாவின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து பல உலக நாடுகளும் சீனாவின் மீதான பொருளாதாரத் தடைகளை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சீனப் பொருளாதாரம் நாளுக்கு நாள் நசிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த ஆறு மாதங்கள் சீனாவுக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கும்.
தொடர்ந்த மழை, வெள்ளம் காரணமாக சீனாவின் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனர்கள் சாப்பிடும் அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என ஜின்-பிங் உத்தரவு இட்டிருக்கிறார். சீனா ஒரு பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்கி இருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு உலக நாடுகளின் உதவி வேண்டும். எனவே சீனா கீழிறங்கி வந்தே ஆக வேண்டிய நிலைமை உண்டாகியிருக்கிறது. அதனை விட பெரும் அவமானம் ஒரு சீனனுக்கு இல்லை. இருந்தாலும் அவனுக்கு வேறுவழியில்லை.
ஜின்-பிங்கை விரட்டியடித்தால் பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்றாலும் யார் பூனைக்கு மணி கட்டுவது? எதிர்ப்புக் கிளம்பிய மறுநிமிடம் எதிர்த்தவன் இருந்த சுவடே இல்லாமல் மறைந்து விடுவான். சீன கம்யூனிஸ்ட்டு கொடூரமானவன்.
கர்மவினை சீனாவை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அத்தனை விதங்களிலும் சிக்கலைச் சந்திக்க விருக்கும் மிக மோசமான சீனாவை உலகம் காண இருக்கிறது.
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் நரேந்திரன்.