சீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன அரசு. மேலும் அவர்கள் வழிபட்டுத்தலங்களை இடித்து வருகிறது. கட்டாய மதமாற்றம் செய்யபடுகிறது. இந்த நிலையில்
உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறை அதிகரித்துள்ளது . இஸ்லாமியர்களின் புனிதமாக கருதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லிம்களை பன்றி இறைச்சி சாப்பிட சீனா கட்டாயப்படுத்துகிறது.
சீன (China) அரசாங்கத்தின் இந்த அருவெருப்பான செயலுக்கு பலியான சயர்குல் என்பவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். பன்றி கறியை சாப்பிட மறுக்கும் உய்கர் முஸ்லிம்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். சின்ஜியாங் பகுதியில் பன்றி வளர்ப்பு தொழிலை மேம்படுத்த சீனா இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது
இதை அம்பலப்படுத்திய சாயர்குல் சவுத்தபே ஸ்வீடனில் ஒரு மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஆவார். சமீபத்தில் அவர் தான் எழுதிய புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களுக்கு புனிதமான நாள் என்பதால், சீனா அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பன்றி கறியை சாப்பிட மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றும், இதனால், தான் அனுபவித்த கொடுமைகளையும் குறிப்பிட்டுள்ளார்.