இந்தியா-சீனா போர் சூழல் ஏற்பட்டால் இரு நாடுகளின் சாதக பாதகங்கள்.

போர் சூழல் ஏற்பட்டால் இரு நாடுகளின் சாதக பாதகங்களை ஒப்பிடுதல் என்பது உலக நடைமுறை இப்பொழுது எல்லையில் சிக்கலென்பதால் அந்த ஒப்பீடுகள் தொடங்கிவிட்டன‌

இப்போது இரு நாட்டுக்கும் யுத்தம் வந்தாலும் பெரும் அளவில் வெடிக்காது, கல்வான் பள்ளதாக்கு சண்டை என்பதால் யுத்தம் அதை ஒட்டித்தான் நடக்கும். பெரும் அளவில் நிச்சயம் இருவரும் வரமாட்டார்கள்

கல்வான் பள்ளதாக்கில் ஆதிக்கம் செலுத்தபோவது விமானபடை மற்றும் தரைபடை, கப்பல்படை இதில் வராது

தரைபடையில் சீனா மிகபெரியது என்றாலும் எல்லா வீரர்களையும் இங்கு குவிக்க முடியாது, அவர்களின் சில பிரிவுகளையும் டாங்கி படைகளையும், ஏரியில் நின்றுதாக்கும் சில படகுகளையும் களமிறக்கும்

டாங்கி படையில் இந்திய டாங்கிகள் சீனாவுக்கு சளைத்தது அல்ல, சமாளிக்கும் திறன் மிக்கவையே

கல்வான் மலைபாங்கான இடம் என்பதால் விமானபடையே வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் சக்தி. அதுவும் அங்கு அடிக்கடி மாறும் காலநிலையில் பனி வெயில் மழை என எல்லாவற்றிலும் பறக்கும் விமானங்கள் அவசியம்

இந்தியாவின் மிராஜ் 200 சூ 30 ரக விமானங்கள் அந்த அதிசயத்தை செய்யும், சீனாவிடம் இருக்கும் ஜே 10 ரக விமானம் மட்டும் அதற்கு ஈடு கொடுக்கும் ஆனால் ஜே ரக விமானங்களின் இயங்குதிறன் இதுவரை நிரூபிக்கபடவில்லை

அது சீன தயாரிப்பு என்பது நமக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயம்

சீனாவிடம் ஏகபட்ட விமானமும் வீரர்களும் உண்டு எனினும் அதை முழுக்க கல்வானுக்கு திருப்ப முடியாது, அப்படி திருப்பினால் கிழக்கில் சில நாடுகள் சில இடங்களை விழுங்கிவிடும் சில தீவுகளை சீனா இழக்கலாம்

ஆம் அந்நாட்டின் கிழக்கத்திய நிலை அப்படி

இது போக அது மலையில் முழு யுத்தத்துக்கு வரமுடியாதபடி வந்தாலும் வெற்றிபெற முடியாதபடி பலத்த சிக்கல் உள்ளது, மலை யுத்தம் என்பது சிக்கலானது தரைபடைக்கு சரியான விமானபடை வழிகாட்டாமல் படை நகர்த்த முடியாது

சீனா தயங்கி நிற்பது இதனில்தான், சீனாவுக்கு போட்டியாக தன் சப்ளை ரூட் முதல் வான் பலம் வரை கொண்டு நிற்கின்றது இந்தியா.

தைவானிடம் அடிக்கடி வாலாட்டும் சீன விமானங்களை அந்த நாடு விரட்டி அடிக்கின்றது, நேற்று கூட அடித்தது. தைவானிடம் செல்லுபடியாகா தன் வித்தை இந்தியாவிடம் பலிக்காது என்பது சீனாவுக்கும் தெரியும்

இந்நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ரகசிய உதவிகளை இந்தியாவுக்கு வழங்க தொடங்கிவிட்டன‌

இந்தியா அஞ்சும் விஷயம் சீன நீர்மூழ்கி நடமாட்டம். அதை கண்டறியவும் கட்டுபடுத்தவும் இந்திய விமான தாங்கி கப்பலான விக்ராந்தை களத்தில் இறக்கி உளவு விமானம் மற்றும் கப்பல் சகிதம் மிகபெரிய நடவடிக்கையினை தொடங்கிவிட்டது இந்தியா

யுத்தம் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம்

ஆனால் 1962 மற்றும் 1967 போல நிலமை இருக்காது, இந்தியாவின் கை பல இடங்களில் ஓங்கும்.

சம பலத்தோடு இந்தியா நிற்பதும் அதற்கு பல நாடுகளின் ஆதரவு இருப்பதையும் கண்டுத்தான் சீனா உறுமலோடு தன்னை சுருக்கி கொண்டு தன் எல்லையில் நிற்கின்றது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version