லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில்43 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.இந்த நிலையில் இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சு நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது இந்த அதி நவீன விமானங்கள் சீனாவின் எல்லை பகுதியில் பறந்தது
இந்தியா ரபேல் விமானங்களை பறக்கவிட்டதின் எதிரொலியாக சீனா தன் பிரத்யோக துருப்பு சீட்டான ஜே 20 விமானங்களை இந்திய எல்லையின் அருகே பறக்கவிட்டது, ஒரு வகையில் இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான்
ஆம், ஜே 20 என்பது ரேடாரில் சிக்காத ரகம் என சொல்லித்தான் உலகை மிரட்டியது சீனா, இப்பொழுது எல்லைக்கு வந்த இரு விமானங்களும் இந்தியாவின் ரேடாரில் சிக்கியது, ஆனால் ஒருவேளை ரேடார் மறைப்பு சிஸ்டத்தை அவர்கள் நிறுத்தி வைத்திருக்கலாம் எனும் தியரியும் உண்டு. சீனாவிடம் மிக குறைந்த எண்ணிக்கை ஜே 20 விமானங்களே உண்டு , அவற்றை இந்திய எல்லையில் நிறுத்திவைக்கவும் முடியாது, காரணம் கிழக்கே அமெரிக்கா வம்பிழுத்தால் அங்கும் இவைதான் சென்றாக வேண்டும்.
இதனால் சும்மா ஒரு ரவுண்ட் வந்திருக்கலாம், வந்ததை இந்திய ரேடார்களும் செயற்கைகோள்களும் நன்றாக உள்வாங்கியும் விட்டன, ஒரு வகையில் இந்திய வலையில் சிக்கியிருக்கின்றது சீனா இந்நிலையில் அமெரிக்காவிடம் இந்தியா வாங்கிய உளவு விமானங்களை கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்த பாகிஸ்தான் என்ன செய்ய என தெரியாமல் அலறிகொண்டிருக்கின்றது.முன்பெல்லாம் பாகிஸ்தான் கேட்காமலே கொடுத்த அமெரிக்கா இப்பொழுது கேட்டால் அடிக்கும் நிலைக்கு சென்றுவிட்டதில் பாகிஸ்தானுக்கு கடும் அழுகை அந்த இடத்தில் வந்த சீனா, அமெரிக்க உளவு விமானம் மாதிரியே தன்னிடம் விமானம் இருப்பதாகவும் அதை தருவதாகவும் சொல்லி கொண்டிருக்கின்றது கண்களை துடைத்தபடியே “தெரியுமே, அது அச்சு அசலாக அமெரிக்க உளவு விமானம் போலவே இருக்கும், ஆனால் அதை போல் வேலை செய்யாதே” என பாகிஸ்தான் சொல்லிவிட கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றது சீனா.