சீனாவிற்கு இந்தியாவுடன் வியாபாரம் செய்ய வேண்டும். அதன்மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம். அவர்களது முதல் சதி திட்டமே நாடு பிடிக்க வேண்டும் என்பதுதான்.
சீன பட்டாசுகளை கொண்டுவந்து குவிக்க வேண்டும். அதன்மூலம் சிவகாசி பட்டாசை இழுத்து மூட வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் கையாண்ட நரி தந்திரம் குறைந்தவிலை. நல்ல வேளை அது தொடர முடியாமல் போனது. இல்லாவிட்டால் நமது நாட்டு பட்டாசு தொழிலை முற்றிலுமாக இழுத்து மூடிய பிறகு சீன பட்டாசு விலை பல மடங்கு உயர்ந்து இருக்கும். நமக்கு வேறு போக்கிடம் இல்லாமல் ஆக்கி இருப்பார்கள். மோடி அரசால் அது காப்பாற்றப்பட்டுள்ளது.
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நமது உள்ளூர் கடைகளில் குறைந்த விலையில் அதிகமாக கண்ணில்பட்ட மைக்ரோமேக்ஸ், லாவா, இன்டெக்ஸ், கார்போன்… இந்த மொபைல்கள் எல்லாம் இப்போது எங்கே போயின?
ரெட்மி, ரியல் மீ, விவோ, ஓபோ, ஹானர், ஒன் பிளஸ், இன்பினிக்ஸ்… இப்படி தினம் ஒரு புது சீன மொபைல் இந்திய சந்தையில் சீனாவால் திட்டமிட்டு தொடர்ந்து நுழைக்கப்பட்டன. இதனால் லேசாக முளைத்த இந்திய மொபைல் நிறுவனங்களும் மூழ்கிப் போயின.
இந்திய சந்தையில் mi3 என்ற மொபைல் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் விலை 13999 ரூபாய்தான். இது அந்த நிறுவனத்தின் பிளாக் ஷீப் மொபைல் என்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்று அந்த நிறுவனத்தின் பிளாக் சீப் மொபைலான mi10 மொபைலின் விலை 50000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஒன் பிளஸ் ஒன் அறிமுகமானபோது அதனுடைய விலை தோராயமாக 30,000 ரூபாய். ஆனால் ஒன் பிளஸ் 8 ப்ரோ மொபைலின் விலை 49999 ரூபாய்.
ஆரம்பத்தில் சீன மொபைல்களுக்கும், மைக்ரோமேக்ஸ், லாவா, கார்போன், இன்டெக்ஸ் போன்ற மொபைல் களுக்கும் இடையேதான் போட்டி இருந்தது. ஆனால் இப்போது போட்டியே சீன மொபைல்களுக்கும், சீன மொபைல்களுக்கும் இடையேதான் உள்ளது. பட்ஜெட் மொபைல் வரிசையில் இருந்த இந்திய மொபைல்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. ரூ. 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை விலையுள்ள மொபைல்கள் 95% சீன மொபைல்களின் ஆதிக்கமே உள்ளன.
லடாக் எல்லை பிரச்சனைக்கு முன்புவரை சீன மொபைல்களின் விலையை உற்றுநோக்கினால் அனைத்து மொபைல்களின் விலைகளும் முன்புபோல் மலிவாக இல்லை என்பதை உணர முடியும். அவை படிப்படியாக அதிகமாகிக்கொண்டே போயின. ஒரு மொபைலுக்கு மாற்றாக நாம் தேடும் மற்றொரு மொபைலும் சீன மொபைல்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர்களின் திட்டம். அதனை படிப்படியாக நிறைவேற்றி வந்தனர்.
இது போலத்தான் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற அனைத்து மின்னணு சாதனங்களிலும் சீனா திட்டமிட்டு களமிறங்கி நாசம் செய்தது. பொம்மைகள், பரிசுப் பொருள்கள் போன்ற துறைகளை ஒட்டுமொத்தமாக சீனா கபளீகரம் செய்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இப்போது இந்திய மக்களின் மனநிலை சீனாவிற்கு எதிராக உள்ளது. அதே நேரம் இந்திய பொருள்களை வாங்க வேண்டுமென்ற தேசபக்தி எண்ணம் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது. இதனால் பரவலாக மொபைல் கடைகளில் சீனாவுக்கு மாற்றாக சாம்சங், நோக்கியா போன்ற மொபைல்களையே வாங்க முன்வருகின்றனர்.
அவர்களிடம் மூளை சலவை செய்து ஆஃபர் என்ற பெயரில் பவர் பேங்க் போன்ற பொருட்களை கொடுத்து விவோ, ஒப்போ போன்ற சீன மொபைல்களை தலையில் கட்டி விடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இந்த மொபைல்களும் made in Indiaதான் என்று வாடிக்கையாளர்களிடம் மூளை சலவை செய்கின்றனர். மேலும் சாம்சங், நோக்கியா போன்ற மொபைல்களை வாடிக்கையாளர்களின் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்துவிடுகின்றனர்.
ஒன் பிளஸ் 8 மற்றும் ஒன் பிளஸ் 8 ப்ரோ மொபைல்கள் அமேசான் இணையதளத்தில் பிளாஷ் சேல் மூலம் “சில நொடிகளில் விற்று தீர்ந்து விட்டன” என்ற அப்பட்டமான பொய்யை திட்டமிட்டு “தி இந்து” போன்ற பத்திரிகைகள் வெட்கமே இல்லாமல் கடந்த வாரம் வெளியிட்டன. ஆனால் அவை விற்பனையாகாமல் நாட்கணக்கில் இருந்தன. இன்றும்கூட (01/07/2020) அமேசான் இணையதளத்தில் ஒன் பிளஸ் 8 மொபைல்கள் விற்பனையாகாமல் உள்ளதை பார்க்க முடிகிறது.
இருந்தாலும் நமது மக்கள் அதிகமானோர், சீன பொருட்களை புறக்கணிப்பதால் அவற்றின் விற்பனை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. நாடு முழுவதும் ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், ரெட்மி, ரியல் மீ போன்ற சீன மொபைல்களின் ஷோரூம்கள் ஈ விரட்டி கொண்டிருக்கின்றன. அதேநேரம் சாம்சங் நிறுவனத்தின் M01, M11, M21 போன்ற குறைந்த விலை புதிய மொபைல்கள் கடைகளில் உடனுக்குடன் விற்று தீர்ந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கைப்பற்றும் வகையில் மைக்ரோமேக்ஸ், கார்பன், இன்டெக்ஸ், லாவா போன்ற இந்திய மொபைல் நிறுவனங்கள் மீண்டும் தங்களின் புதிய மாடல் மொபைல்களை களமிறக்க தயாராகி வருகின்றன. இந்த முறை உதிரிப் பாகங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. ஜியோ நிறுவனமும் மிகப்பெரிய திட்டத்துடன் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சாம்சங், நோக்கியோ, ஏசுஸ் போன்ற சீன நாட்டை சேராத பிறநாட்டு நிறுவனங்களும் புதிய புதிய மாடல் மொபைல்களை இந்தியாவில் களமிறக்க போட்டிபோட்டு வரிந்து கொண்டு வேலை செய்கின்றன.
டாடா போன்ற இந்திய நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை கைவிட்டு விட்டன.
சீன பொருட்கள் புறக்கணிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இந்தியாவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் பிரதமர் மோடி முனைப்போடு செயல்பட்டு வருகிறார். கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் சீனா மீது அமெரிக்கா இத்தாலி ஆஸ்திரேலியா பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. ஜப்பான் உள்பட உலக நாடுகள் சீனாவில் உள்ள தங்களின் நிறுவனங்களை உடனே அங்கிருந்து இந்தியாவிற்கு மாற்றும் நடவடிக்கைகளில் முனைப்போடு இறங்கியுள்ளன. அந்த நிறுவனங்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் வேளையில் மோடி அரசு கனகச்சிதமாக இறங்கியுள்ளது.
தேவையில்லாமல் இந்தியாவை பகைத்துக் கொண்டதால் இந்தியவைவிட சீனாவே பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஆப்பு அசைத்த குரங்காக இப்போது சீனா சிக்கித்தவிக்கிறது.
=====