சீரழிய துவங்குகிறதா சீனா? இல்லை சர்வதேசத்தை எதிர்த்து சாதிக்கும் வல்லமை உண்டா ?

முதலில் இந்தபதிவில் நாம் சீனாவின் வலிமைபற்றி பேசுவதற்கு முன் சீனா தனது நாடு பிடிக்கும் மறைந்துபோன ஆதி மனித ஆசையை துவக்கியிருக்கும் சீனாவின் குருர புத்தியை பற்றி பேசியே ஆகவேண்டும். அதேசமயம் அந்த சிந்தனை தனக்குதானே குழிபறித்துக்கொள்ளும் பேரபாயமாக தற்போது தோன்றியிருப்பதையும் சீனா உணர்ந்துள்ளதா என்பதை பற்றித்தான் இப்போது பார்க்கபோகிறோம்?

சீனா ஒரு மாஸ்டர் பிளான் போட்டுத்தான் இந்த சர்வதேசத்தில் தானே சர்வாதிகாரியாக நிலைப்பதற்கான நடவடிக்கையை துவங்கியுள்ளது. அந்த திட்டத்தின் முதல்படிதான் உலகை இன்று ஆட்டிப்படைக்கும் கொரானா விஷக்கிருமி. சீனா இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இது மிருகத்திலிருந்து தானாக உருவானதோ அல்லது சீன ஆய்வகங்களிலிருந்து தற்செயலாக கசிந்ததாகவோ இருக்க வாய்ப்பே இல்லை.

இதற்கு உதாரணம் உலகில் பரவிய எந்த நாடும் இதுவரை முற்றும் மீளாத நிலையில் இக்கிருமி தோன்றிய சீனா தற்போது மிகப்பெருமளவில் சகஜமான நிலைக்கு திரும்பி விட்டது.இதற்கான வாய்ப்பு, ஒன்று அந்த நாடு இக்கிருமியை அழிக்கும் மருந்தினை ஏற்கனவே கண்டுபிடித்து வைத்துகொண்டுதான் கிருமியை வெளியிட்டிருக்கவேண்டும்.

அல்லது , உலகில் தன்மீது சந்தேகம் வராதிருக்கும் பொருட்டு யூஹான் மாகானத்தில் வெளிநாட்டவர் அதிகம் புழங்கிய பகுதியில் லீக் செய்ததன் மூலம் வெளிநாட்டிற்கு பரவ விட்டு சரியான சமயத்தில் அதைக்கட்டுபடுத்திக்கொள்ள தன் பிரஜைகள் பல லட்சம்பேரை பலியிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டுமே சீனாவின் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்தான். இதில் திட்டமிட்டு பரப்ப பட்டது என்பதற்கு ஆதாரமாக கூறவேண்டுமானால் . சீனாவின் மிகபலத்த எதிரியான அமெரிக்காவில்தான் இந்த நோய் அபாரமாக பரவியுள்ளது. இது திட்டமிட்டு அமெரிக்காவை நிலைகுலையச்செய்யும் சதியாகத்தெரிகிறது.

இது நாடு பிடிப்பதற்கான திட்டமிட்ட சதியேதான். முதலில் இக்கிருமியை பரப்பி உலக நாடுகளை மொத்தமும் அவரவர் நாட்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தச்செய்து விட்டு ஆசியாவில் தன் மிகப்பெரும் ராணுவ பலத்தைகொண்டு தனது நில எல்லையை விஸ்தரிப்பதன் திட்டமாகும்.

அவர்களது கணக்குப்படி உலகில் தன்னை எதிர்க்கக்கூடிய ஐரோப்பிய வல்லரசுகளை தங்கள் நாட்டு பிரச்னையில் கவனத்தை திருப்பிவிட்டால் ஆசியாவுக்குள் ஏற்படக்கூடிய எல்லைப்பிரச்னையில் மேற்படி நாடுகள் கவனம் செலுத்தாது . இந்த நேரத்தில் தன் அபரிமிதமான ராணுவ பலத்தைக்காட்டி தனது அண்டை நாடுகளை பயமுறுத்தி தன் எல்லைகளை அகலப்படுத்திக்கொள்வதும்.தனக்கு தீராத பிரச்னையாக இருந்து வரும் தைவான் மற்றும் ஹாங்காங் ஆகிய பிரச்னைகளை வன்முறையான படு கொலைகளின் மூலம் #தீர்த்துவிடுவதும். தான்.திட்டம்.

ஆனால் இதற்கு எதிர்த்துக்குரல் கொடுக்கக்கூடிய வலிமையுள்ள எதிரி இந்தியா மட்டுமே எனவே முதலில் இந்தியாவை மிரட்டி வைப்பதே நோக்கம் ஆனால் அதற்கும் ஒரு சப்பை காரணமாவது வேண்டுமே என்று நினைத்த சீனாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது நமது லாடக் மீட்பு அறிவிப்பு. பாகிஸ்தான் தான் கொள்ளையடித்த நிலப்பரப்பான லடாக்கில் கொஞ்சம்சீனாவுக்கும் பங்களித்து என்னை கேட்கக்கூடியது ஒரேநாடு இந்தியா அவர்கள் என்னை கேட்டால் பெரியண்ணன் நீ எனக்கு ஆதரவாக வரவேண்டும் என்று பேரம் முடித்திருப்பதால். இப்போது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க சீனாவுக்கு பாக் தந்த பங்கையும் மீட்க வேண்டிய நிலை வந்துள்ள நிலையில் செஞ்சோற்று கடனுக்காகவும்.

தன்னுடைய அடிமனதில் உள்ள இந்தியாவை மிரட்டும் திட்டத்திற்கு தன்னிச்சையாக ஒரு வாய்ப்பு கிடைத்தமையாலும், இப்போது சீனா முதலில் இந்தியாவை பயமுறுத்தவே மெல்லிய ஊடுருவல் செய்ய முயன்றது. இதில் இன்னொரு பார்வையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில் தான் வாங்கிய பங்குக்காக பாகிஸ்தானை காப்பாற்றவும் அவசியம் உள்ளது சைனாவுக்கு…? ஆனால் உண்மைான நோக்கம் முதலில் பாகிஸ்தானுக்காக என இறங்கி பிறகு பாகிஸ்தானிலும் தன் எல்லையை அகலப்படுத்துவதே சீனாவின் ராஜதந்திர கொள்கையாகும்.

சீனாவின் முதல் திட்டமான கிருமி பரப்புதல் பல மேலை நாடுகளில் முழு வெற்றி பெற்ற நிலையிலும். இந்தியாவில் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் வெற்றி பெறவில்லை.அவர்களுடைய திட்டப்படி இந்தியாவில் பரவியிருந்தால் இன்று இந்தியாவில் கோடிக்கணக்கில் தொற்றுகளும் லட்சக்கணக்கில் சாவுகளும் ஏற்பட்டிருக்கும்.காரணம் நமது தேசத்தின் மனித நெருக்கடியாகும். கிட்டத்தட்ட இந்தியா இன்று நிலைகுலைந்திருக்கும். நாட்டில் எங்கும் உணவுக்காக போராட்டங்கள் கொள்ளைகள் கலவரங்கள் என கற்பனை செய்ய முடியாத சூழல் நிலவியிருக்கும்.

உலகின் வல்லரசு எனக்கருதப்படும் அமெரிக்காவிலும் இத்தகைய இனக்கலவரங்கள் வெடித்து கொள்ளைகள் நடந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை அனைவரும் பார்த்தோம்.ஆனால் முதல் கட்டத்திலேயே உலகில் எவருமே கற்பனை செய்திராத வகையிலும் இந்தியாவில் முதல்முறையாகவும் லாக்டவுன் என்ற தேசிய இயக்க நிறுத்தத்தை துணிந்து அறிவித்ததன் மூலம் இந்தியா தன்னை காத்துக்கொண்டது.

முதல் லாக் டவுன் மூலம் நோயை பரவ விடாமல் சமயத்தில் காத்ததுடன் மக்களுக்கும் இந்த நோயைப்பற்றியும் அதன் தீவிரத்தை பற்றியும் நல்ல விழிப்புணர்வை லாக்டவுன் மூலமாக ஏற்படுத்திவிட்டது இந்தியா.இந்த எதிர்பாரத தாக்குதலை இந்தியரசு திறமையாக தவிர்த்திருக்காவிட்டால்இன்று சீன எல்லையில் நம் படைகள் துணிந்து நிமிர்ந்து நிற்க இயலாமல் போயிருக்கக்கூடும்.

சீனாவுக்கு இது முதல் சரிவு ?
இரண்டாவதாக பழைய 1962/1967/2010 களில் இருந்த பொம்மை மன்மோகன் அரசு போன்று இருக்கும் என்று எதிர்பார்த்த சீனாவுக்கு போதாத காலமாக மோடி தலைமையில் உண்மையான இந்தியக்குடிமக்களின் ஆட்சியமைந்திருந்தது இரண்டாவது சரிவாகும்.

அதேசமயத்தில் சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் மேற்படி கிருமி சீனாவின் சதி என்பதை உறுதியாக உணர்ந்து விட்டதால்குறிப்பாக தன் மக்களில் 150000 லட்சம் வரை பலி கொடுத்து விட்ட அமெரிக்கா இதற்கு பலிவாங்க காரணம் தேடிவரும் நிலையில் இந்திய ஊடுருவல் நிகழ்ச்சியின் மூலம் ஒரு போர்பதட்டத்தை ஏற்படுத்திய சீனா தன்தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம் சீனாவுக்கு தான் ஒரு யாராலும் அசைக்கமுடியாத கட்டுக்கோப்பான அடக்கு முறை ஆட்சியில் மக்களை வைத்திருக்கிறோம் என்ற அகந்தை தற்போது நொறுங்கியிருப்பதுமற்றொரு அடியாகும்.அடக்கு முறை ஆட்சிகளில் எப்போதும் மக்கள் அழுத்தத்துடன்தான் இருப்பார்கள் . சீனாவுக்கும் இது விதிவிலக்கல்ல .இந்நிலையில் ராணுவத்தின் கட்டுப்பாடுகள் யுத்தம் காரணமாக உள்நாட்டில் குறைந்தால் எக்கணமும் மக்கள் கிளர்ச்சியடையக்கூடும். என்று தற்போது அங்கிருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இத்தனை சிக்கல்களையும் ஆப்பசைத்தக்குரங்காக மாட்டியிருக்கும் சீனா தன் மன பயத்தை வெளியில் காட்டாமல் இன்று வரை தன்னை ஒரு டிராகனாக காட்டிக்கொள்ள முனைகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் டிராகன் என்று ஒன்று இல்லை அது பல மனிதர்கள் ஒன்றினைந்து உருவாக்கும் பிம்பம்தான்.
இந்த கூட்டில் நடுவில் இருக்கும் ஒரு மனிதன் காயம் பட்டாலும் தொடர்ந்து டிராகன் நடனம் நடக்காது. அதைப்போலவே சீனாவில் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு சிறு வெடிப்பு கிளம்பினாலும் இன்றைய சூழலில் சீனா சீட்டுக்கட்டென சரிந்து விடும்.

ஆனால் தன் உண்மையான பயத்தை மறைத்து இன்னும் தான் கெத்தாக காட்டிக்கொள்ள சினிமா நடிகனைப்போல் செயற்கையாக தன்முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு கட்டளை இடுவது போன்று ஆணவமான அறிக்கைகளையே வெளியிட்டு வருகிறது சீனா. மேலும் உலக நாடுகள் சீனாவை குறிவைத்து காத்து கொண்டிருக்கின்றார்கள் அதுவும் இந்தியா மீது கை வைத்தால் போதும் சுற்றி நின்று சீனாவை சின்னாபின்னமாக்கி சிறு குறு நாடுகளாக பங்கு போட்டுவிடும். இது தான் தற்போது சீனாவின் நிலைமை . சீனா தற்போது சீரழிய துவங்கி விட்டது என்றே கூறலாம்.

Exit mobile version