அதன் பெயர் ஹார்பின்
ஹார்பின் வடக்கு சைனா நகரம் ரஷ்ய சீன எல்லையில் உள்ள நகரம், அங்கு ரஷ்யாவில் இருந்து திரும்பியவர் மூலம் கொரோனா வந்துவிட்டது என சொல்லி மிக பெரிய தடுப்பினை சீனா செய்திருக்கின்றது, ஆக சீனா இன்னும் சிகப்பு எச்சரிக்கையிலே இருக்கின்றது
அமெரிக்காவில் 9 லட்சம் மக்கள் பாதிக்கபட்டு சாவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி செல்கின்றது, நிச்சயம் கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்கா கண்ட மிக பெரிய அழிவு இது
முன்பு செவ்விந்தியர்களை கொத்து கொத்தாக கொன்றார்கள், பின் உள்நாட்டு போர் என செத்தார்கள் மற்றபடி பேர்ள் ஹார்பர் தாக்குதல், பின்லேடன் தாக்குதல் எல்லாம் இதனுடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுமல்ல, அவை சொத்து இழப்பே
இப்பொழுது சொத்துக்கள் வேலை முடக்கம் என அழிகின்றன, அதைவிட அதிகம் மானிட உயிர்கள். பல்லாயிரம் கோடி டாலர் இழப்பும் ஏகபட்ட உயிர்கள் இழப்புமாக திணறுகின்றது அமெரிக்கா
ஒரே நாளில் 3 ஆயிரம், 2 ஆயிரம் என நடக்கும் சாவுகள் அவர்களை நிலைகுலைய வைத்திருக்கின்றன.
கொரோனா பட்டியலில் தற்போது இணைந்திருக்கும் நாடு துருக்கி, சட்டென துருக்கியின் உச்சிமுடியினை பிடித்து தூக்கிவிட்ட கொரோனோ 1 லட்சம் பேரை பாதித்து 3 ஆயிரம் பேரை கொன்று கோரமுகம் காட்டுகின்றது
ஐரோப்பிய நாடுகளில் சாவு எண்ணிக்கை அனுதினமும் ஆயிரத்திலிருந்து சில நூறுக்கு சரிந்தாலும் புதிய நோயாளிகளின் வரவு அச்சத்தையே கொடுக்கின்றது
இந்தியா 17ம் இடத்துக்கு வந்துவிட்டது , 23 ஆயிரம் நோயாளிகள் 720 இறப்புகள் என அது அந்த இடத்தை எட்டியிருக்கின்றது
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து கடும் இறுக்கம் காட்டுகின்றது இந்தியா , நாடெங்கும் கட்டாய ஊரடங்கு அமுல்படுத்தபடுகின்றது
எனினும் மக்களின் உணவு பாதுகாப்பினை அது உறுதி செய்கின்றது, தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மக்கள் இயக்கத்தாரும் ஆளுக்கொரு இடங்களில் உணவு கொடுத்து மக்கள் பசியால் வாடாதவாறு காக்கின்றனர்
இது புயல் மழை, வெள்ளம் போல சில நாட்களில் தீரும் விஷயம் அல்ல, விவகாரத்தின் தன்மை பெரிது. உற்பத்தி வரை முடங்கியிருக்கின்றது
பசி பட்டினி மிகபெரும் சிக்கலாக உருவெடுக்கலாம்
இதனால் நீண்டகால திட்டத்தில் மக்களுக்கு குறிப்பாக அடிதட்டு மக்களுக்கு பசியாற்ற என்ன செய்யலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கின்றது இந்திய அரசு, எல்லா நாடுகளின் நிலையும் அதுதான்.
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.