சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது.
ஆப்கனில் தாலிபான்கள் கை ஓங்கும் நேரம் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் நிச்சயம் ஆப்கன் சீன எல்லையில் இருக்கும் உய்க்குர் தீவிரவாதிகளுக்கு உதவுவார்கள் எனும் தியரி வலம் வந்தது அதில் உண்மையும் இருந்தது
இது சீனாவுக்கு ஆபத்து என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
இதுவரை தாலிபான்களோடு பேசிய ஒரே நாடு அமெரிக்கா அது கத்தார் மூலமாக அந்த பேச்சுவார்த்தையினை நடத்தியது
அப்படி பேச்சு நடத்தி தான் ஒரு வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா அதற்கு அவசியமும் இருந்தது
சீனாவும் தான் ஒரு வல்லரசு என்பதை சொல்ல தாலிபன்களோடு பேச்சு நடத்தி உலகுக்கு சொல்ல விரும்பியது, பாகிஸ்தான் ஊடாக அதை செய்திருக்கலாம் ஆனால் பாகிஸ்தானும் தாலிபானும் வேறு வேறு அல்ல என்பது எல்லோரும் அறிந்தது
இதனால் தாலிபான்களை சீனாவுக்கு அழைத்தது, தாலிபான்களும் மகிழ்ச்சியாக சென்றனர் சீனா தங்களை அங்கீகரித்ததில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி
சீனாவில் உய்குர் இஸ்லாமியருக்கு உதவமாட்டோம் ஒழுங்காக ஆப்கனை மட்டும் கெடுப்போம் என உறுதிமொழி கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றது தாலிபன் கோஷ்டி, இது தன் ராஜதந்திர வெற்றியாக சீனா கருதுகின்றது
ஆனால் எக்காலமும் இஸ்லாமிய சகோதரத்துவத்தை தாலிபன்கள் விட்டு கொடுக்கமாட்டார்கள் என்பது அவர்கள் வரலாறு
தாலிபான்களை சீனா வரவேற்றால் அமெரிக்கா சும்மா இருக்குமா என்ன?
இந்திய வந்துள்ள அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திபெத் தலாய்லாமாவின் உதவியாளரை இந்தியாவில் சந்தித்து உருகியிருகின்றார், திபெத் மக்களின் உரிமைக்கு அமெரிக்கா துணை நிற்கும் என நாடகமெல்லாம் நடத்தியிருக்கின்றார்
திபெத்தின் தலாய்லாமா பிரதிநிதியினை ஆண்டனி பிளிங்கன் சந்தித்ததில் மிக கோபமாகியுள்ள சீனா கத்தி கொண்டிருக்கின்றது
அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கனோ சீன கோபத்தை ரசித்தபடி திபெத் தலாய்லாமா பிரதிநிதியினை கட்டிபிடித்து கண்ணீரை துடைத்து கொண்டிருக்கின்றார்.
இது இந்திய அனுமதி இல்லாமல் சாத்தியமில்லை என உணர்ந்த சீனா நற நறவென தன் மஞ்சள் பல்லை கடித்துகொண்டிருக்கின்றது.
கட்டுரை:- ஸ்டான்லி ராஜன் வலதுசாரி சிந்தனையாளர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















