கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார், மில் ஒன்றில் நாகுப்பம் பகுதியை சேர்ந்த சிவசக்தி என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் அவரை அழைத்து வர அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் மற்றும் வெங்கடேசன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
நிலையில் அவர் அழைத்துக் கொண்டு சின்னசேலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது
பின்னால் கொய்யாப்பழம் ஏற்றி வந்த வாகனம் அதிவேகமாக வந்து மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பொலிரோ பிக் அப் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடி சென்று விட்ட.
மேலும் தகவல் தெரிந்து வந்த சின்ன சேலம் காவல் துறையினர் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
