கிறிஸ்தவ கூட்டத்திடம் செல்ல இருந்த உறையூர் ராமர் மடத்தை காப்பாற்றிய பாஜக நபர்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நாச்சியார் கோயில் அருகில் உள்ள 1832 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஸ்ரீராமர் மடாலயம்..

சுமார் 15 கோடி மதிப்புள்ள ராமர் மடாலயம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கொண்டுவரப்பட்டது.

மேலே குறிப்பிட்டுள்ள ராமர் மடாலயம் ஆனது 1979ஆம் வருடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்படுகிறது..

அவ்வாறு எடுத்தது செல்லாது என்று மடத்தை நிர்வாகித்து வந்த நிர்வாகிகளில் ஒருவரான துரைராஜ் நாயுடு அவர்களால் 1975 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி சார்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது ..

மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பின் 1979 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சரி என தீர்ப்பளித்தது…

இந்த நிலையில் கடந்த 50 வருடங்களாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் அந்த மடாலயத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில்,

மேற்படி ராமர் மடாலயத்தின் பல்வேறு கிறிஸ்துவ, கம்யூனிஸ்ட் விழாக்கள் அனைத்தும் நடைபெற்று மடாலயத்தை உருவாக்கியதற்கான நோக்கம் சிதைந்து அவர்கள் கையில் ராமர் மடம் செல்லும் நிலை ஏற்பட்டது..

மேற்படி மடாலயத்தை உருவாக்கிய வீராசாமி நாயுடு அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பிற மாநில தொடர்பு பிரிவின் மாவட்டத்தலைவர் ஹரிநாத் அவர்களால் பல்வேறு அரசு அலுவலர்களுக்கு புகார் கொடுக்கப்பட்டது..

ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளி ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி ராணி அறநிலையத்துறை ஆய்வாளர் திருமதி தமிழ்ச்செல்வி அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி புனிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உரையூர் காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் மேற்கண்ட ராமர் மடாலயம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..

தற்பொழுது தற்காலிக அர்ச்சகர் ஒருவரை நியமித்து ராமர் மடத்தில் அனைத்து பூஜை புனஸ்காரங்கள் இந்து சமய அறநிலையத் துறையால் செய்யப்பட்டு வருகிறது..இந்து மதம் சம்மந்தமான விழாக்கள் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி என அறிவிக்கப்பட்டு இந்த மடத்துக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் குத்தகை தாரர்கள் உரிய வாடகையை அரசுக்கு செலுத்தும் படி அறிவிக்கப்பட்டுள்ளது..

மேற்படி 4500 சதுர அடிக்கு மேல் கொண்ட உறையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த இடத்தின் மதிப்பு சுமார் 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது..

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த உறையூர் ராமர் மடம் கிறுஸ்தவ கூட்டத்தின் பிடியில் செல்லாமல் பாஜகவின் முன்னாள் பிற மாநில தொடர்பு பிரிவின் மாவட்டத்தலைவர் ஹரிநாத் அவர்களால் தடுக்கப்பட்டுள்ளது..

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் திருச்சி புகழேந்தி.

Exit mobile version