ஜெப கூட்டத்திற்கு வந்த 8 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற கிருஸ்துவ போதகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் இவர் சுமார் 20 வருடங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அன்புநகரில் மாரநாதா ஜெபக்கூடம் நடத்தி மதமாற்றம் செய்து வருகிறார்.செல்வராஜின் வசிய பேச்சால் பல மக்கள் ஏமாந்துள்ளனர். ஜெப கூட்டத்திற்கு வரும் மக்கள் தங்களின் குழந்தைகளையும் அழைத்து வருவது வழக்கம்.

பெண் குழந்தைகள் ஜெபக்கூடத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் விளையாடுவார்கள். அங்கு வரும் பெண் குழந்தைகளிடம் செல்வராஜ் பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி .,23ஆம் தேதி, ஜெபக்கூடத்திற்கு விளையாட வந்த 8 வயது சிறுமியிடம் கிருஸ்துவ மத போதகர் செல்வராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆடைகளை கழற்றி மோசமாக வன்புணர்வு செய்துள்ளார் மதபோதகர் செல்வராஜ் அழுதுகொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அதிர்ந்து போயினர்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை விசாரித்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் சாந்தி, கிருஸ்துவ மத போதகர் செல்வராஜை கைது செய்தனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version