மக்களுக்கெல்லாம் மாபெரும் சுவிஷேச செய்தி ஒன்று உள்ளதுஅது என்ன “நற்செய்தி” என்றால் எமது மண்ணிலும் பாஜக கொடி எழ ஆரம்பித்துவிட்டது, இதனால் ராதாபுரம் பக்கமெல்லாம் இனி பாஜக இந்து கட்சி எனும் பிம்பம் உடைந்து அது தேசிய கட்சி எனும் அபிமானம் பெருகுகின்றது.
வழக்கறிஞர் சுதாகர் சுத்தமான கிறிஸ்தவர் இப்பொழுது அவர் பாஜக மாவட்ட வழகறிஞர் பிரிவில் இணைந்துவிட்டார்.சிறுபான்மை கிறிஸ்தவர்களிடம் பாஜக கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு கட்சி அல்ல ஆனால் தேசவிரோதிகள் எம்மதத்தில் இருந்தாலும் எதிர்க்கும் கட்சி எனும் சிந்தனை வளர்கின்றது, தேசாபிமானிகள் மதம் தாண்டி பாஜகவுக்கு பெரிய வரவேற்பினை கொடுக்கின்றார்கள்.
வேலூர் இப்ராஹிம் போல தெற்கேயும் பாஜகவினை தேடி சிறுபான்மையினர் இணைவது நல்ல விஷயம் இது நல்ல மாற்றம், பொதுவாக வறண்ட மண்ணில் இருந்துதான் வலுவான அரசுகள் தோன்றும், இனி ராதாபுரத்திலும் காவிகொடி கம்பீரமாக பறக்கும் ராதாபுரம் தொகுதியில் வலுவான பாஜக தயாராகின்றது, சிறுபான்மை கிறிஸ்தவர்களிடம் பாஜக சென்று சேர்ந்திருப்பதும் அவர்கள் அதை ஏற்றுகொள்வதும்.
மாபெரும் மாற்றத்துக்கான அடையாளம்.அவரிடம் ராதாபுரம் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவாக நீங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் கால்வைக்க வாழ்த்துக்கள் என்றோம், அவரோ அக்கோட்டையினை “ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கோட்டை” என பெயரை மாற்றிவிட்டுத்தான் கால் வைப்பதாக சபதம் செய்திருக்கின்றார்இனி அப்பக்கம் பாஜக மெல்ல வளரும், விரைவில் சர்ச்களின் பங்குதந்தைகள் கூட சங்கிதந்தைகளாக மாறும் காலம் வந்தாயிற்று
கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















