படைப்பு சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லி இயற்கை அர்த்தம் புரிந்து கொள்ளும் வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் வெளி வருவதற்காக இதுபோன்ற விளம்பரங்கள் செய்வது சினிமாத்தனம்.
ஆபாச காட்சி ஆபாச வசனம் பிஞ்சு மனங்களில் காம வன்மம் விதைக்கும் இதுபோன்ற விளம்பர போஸ்டர்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல.
கடுமையான சட்ட நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
சினிமா திரைப்பட தயாரிப்பாளர்கள் இதுபோன்று படங்கள் தயாரித்து அச்சிட்டு உதவக்கூடிய அச்சக உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கிறோம் என்று வீதியெல்லாம் போராடும் பெண்ணுரிமைப் போராளிகள் எங்கே சென்றார்கள்?
கலையை கலையாக பாருங்கள் ஆபாசமாக ஏன் பார்க்கிறீர்கள்
என்று உபதேசம் செய்யும் உத்தமர்கள் எங்கே இருக்கிறார்கள் ?என்று தெரியவில்லை!
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே பாடல் எழுதிய வைரமுத்து எங்கே இருக்கிறார்?
மது ஒழிப்பு போராளிகள் என்று அரசுக்கு எதிராக மட்டும் பேசும் நந்தினி போன்ற போராளிகள் இந்த பெண்ணியம் காக்க என்ன செய்யப் போகிறார்கள்?
பெண்கள் பாதுகாப்பு நல வாரியம் இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
நடிகர்கள் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இதுபோன்ற காம வக்கிரங்களை ஆதரிக்கிறதா என்பதை சொல்லுங்கள்?
ஆமாம் என்று சொல்வார்களேயானால் நாளை நடிகைகள் பங்கேற்கும் விழாக்களில் இதுபோன்று வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு ரசிகர்கள் நின்றால் எதிர்வினை வருமா? வராதா?
காம வக்கிர தோடு படமெடுத்த இந்தப் படத்தினுடைய நடிகரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் ஜெயக்குமார் அவர்கள் குடும்பத்துப் பெண்கள் முன்பு வாழைப்பழம் வைத்துக் கொண்டு நின்றால் ரசிப்பாரா கோபப்படுவாரா?
தமிழர் கலை பண்பாடு பேசக்கூடிய திக பாரதிராஜா போன்றவர்கள் இதுபோன்ற நபர்களை ஆதரிக்கிறார்களா?
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இந்த சந்தோஷ் ஜெயக்குமார் போன்ற நபர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.’
இது போன்ற காட்சி படங்களை அனுமதித்தால் பொதுமக்களே வெகுண்டெழுந்து நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகிவிடும் .
அரசாங்கம் பொது அமைதியையும் பெண்கள் மீதான மதிப்பையும் பாதுகாத்திட கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் திராவிட கட்சிகளின் ஆதரவு தான் காரணம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















