குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இந்தியா அடைக்கலம் தரும். அந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
தேவி சக்தி:
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக, இந்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. தூதரக அதிகாரிகள் மூலம் வெளியுறவு அமைச்சகத்தின் 24 மணி நேரமும் செயல்படும், “சிறப்பு பிரிவு” ஏற்படுத்தப் பட்டு, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு என, பிரத்யேகமான முறையில், “இ-விசா” அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் தொடர்புக் கொள்ளக் கூடிய வகையில், வாட்ஸ் அப், இமெயில், தொலைபேசி மூலம் வரும் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டு, தேவையானவர்களுக்கு உடனடியாக சந்தேகம் தீர்க்கப்பட்டு, உதவியும் செய்யப் பட்டு வருகின்றது.
மத்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் அளித்த தகவலின் படி, இதுவரை, 175 தூதரக ஊழியர்கள் மீட்கப் பட்டனர். மேலும், 263 இந்தியர்கள், இந்தியர்கள் – சீக்கியர்கள் உள்ளிட்ட 112 ஆப்கன் நாட்டவர்கள், மூன்றாம் நாட்டை சேர்ந்தவர்கள் 15 பேர் என இதுவரை மொத்தம் 565 பேர் மீட்கப் பட்டு உள்ளனர்.
‛தேவி சக்தி’ என பெயரிடப்பட்ட இந்த மீட்பு பணிக்கு, 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஆப்கனைச் சேர்ந்த சிலரையும், இந்திய அரசு அழைத்து வந்து உள்ளது.
விரைவில், அனைவரையும் மீட்பதில் இந்திய அரசு முழு உறுதி பூண்டுள்ளது. ஆப்கனில் உள்ள அனைத்து இந்திய மக்களையும், பத்திரமாக அழைத்து வருவதற்கு, இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
சமீபத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்ட, தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ள கருத்து, அவர்களின் மதப்பற்றை கோடிட்டுக் காட்டுகிறது.
அவர் கூறியதாவது, “நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
மதம் என்று வரும் போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்து இருக்கிறோம்; இரு நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கலக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை, மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம்”.
அமைதியை மட்டுமே விரும்புவதாக, கூறிக் கொண்டு இருந்தவர்களின் இன்றைய நிலையை, உலகமே பார்த்து பரிதாபப் படுகின்றது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க, விமானத்தில் தொங்கி பயணம் செய்ததால், அவர்கள் உயிர் நீத்த காட்சியை, பார்த்த அனைவரும் பதைபதைத்தனர்.
உலகிலேயே, எல்லா மதத்தினரும், மகிழ்ச்சியாக, அமைதியாக, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் நாடு, “இந்தியா” மட்டுமே.
இங்கே வாழ்ந்து, வளர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய அரசிற்கு எதிராகவும், கருத்துக்களை தெரிவித்து வருபவர்கள், ஒரு நிமிடமாவது, ஆப்கானிஸ்தானில் வாழ முன் வருவார்களா? என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு யாரும் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. நமது நாட்டின் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும், சில தீய சக்திகளை, மக்கள் அடையாளம் கண்டு, அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்