உத்திர பிரதேசம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 1,254 கோடி ரூபாய் மதிப்பில் 50 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்,இதுமட்டுமில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வதற்காக வாரணாசி தொகுதிக்கு, பிரதமர் மோடி நேற்று வந்தார்.
வாரணாசியில், பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பலர் வரவேற்றனர்.
மூன்று ஜோதிர்லிங்க திருத்தலங்களை இணைக்கு இரயில் சேவையான காசி – மஹாகாள்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டியும் ஜனசங்கத்தின் தலைவர் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின், 63 அடி உயர சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதன் பின் பிரதமர் மோடி பேசியதாவது : குடியுரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு எட்டப்பட்டது என கூறிய பிரதமர் பிரதமர் மோடி, தீவிர ஆய்வுக்கு பிறகே குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து, குடியுரிமை சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு கடைபிடித்து வரும் தற்போதைய நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்றும் பிரதமர் மோடி உறுதிப்பட கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், குடியுரிமைச் சட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.