பா.ஜ.க வில் மாநிலத் துணைத்தலைவராக இருக்கும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தற்போது கோவையில் துளசி பயண யாத்திரையை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை டீக்கடை முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சிறிய குடிசை வீடு முதல் பெரிய பங்களா வரை அனைவரையும் நேரில் சந்தித்து துளசி மற்றும் 2021 காலண்டரை வழங்கி வருகிறார்.
இவர் செல்லும் கிராமங்களில் உள்ள வீடுகளில் மோடியின் திட்டங்கள் சென்றிருக்கிறதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்கிறார். அவ்வாறு இல்லை எனில் உடனடியாக மோடியின் முக்கிய திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் செல்வமகள் திட்டம் முத்ரா கடன் உதவி என திட்டங்களை கூறி அதை எப்படி பெறவேண்டும் அதற்கான வழிமுறைகளையும் பெற்றும் தருகிறார். வானதி சீனிவாசன்.

இதற்கு கிராம மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது இந்த பயணத்தின் போது மக்களோடு மக்களாக கலந்து அவர்களிடம் பேசி பழகி அவர்களின் குறைகளையும் கேட்டு அதற்கான நிவர்த்தி செய்யும் பணியையும் மேற்கொள்கிறார்.இதற்கு முன்பே கோவையில் 5 நாட்கள் தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை நடத்தி பல குளங்களை தூர்வாரினார் இது கோவையில் பெரிதும் பேசப்பட்டது. இதன்பின் தமிழகமெங்கும் குளங்கள் தூர் வரப்பட்டனர் தமிழக அரசின் முயற்சியால் இதற்கு இவரின் வானதி சீனிவாசனின் தாமரை யாத்திரை தான் காரணம்.
மேலும் இவர் உப்பிலிபாளையம் எனும் கிராமத்தைத் தத்தெடுத்து நூலகம் முதல் குளங்கள் வரை அனைத்தையும் பராமரித்து வருகிறார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் கோவை மக்கள் சேவை மையம் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடியின் திட்டங்களை நேரடியாக சென்று சேர்க்கிறார் பூக்கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இவரின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது
மேலும் கல்லூரி மாணவர்களிடையே காதி ஆடைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே பேஷன் ஷோ நடத்தினார் இதுவும் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது ஆண்டுதோறும் இவர் இந்த பேஷன் ஷோவை நடத்தி வருகிறார் கோவையில் வானதி ஸ்ரீனிவாசன் என்பவர்க்கு தனி பெயர் உண்டு அடக்கமானவர் நம்ம வீட்டு பொண்ணு என பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில்பாஜகவில் அதிக ஓட்டு பெற்ற வேட்பாளராக இவர் இருக்கிறார் இவர் போட்டியிட்ட தொகுதியில் 34000 ஓட்டினை பெற்றார். அதுவும் பா.ஜ.க தனித்து களம் கண்டது. அதிமுக திமுக தலைவர்கள் இருந்த காலத்தில் இவ்வளவு ஒட்டு பெற்றார் என்பது இது மோடி மற்றும் இவரின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
இது வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி களத்தில் இறங்கி விட்டார் வானதி சீனிவாசன்,என கூறினாலும் ஆனால் அவர் கடந்த 5 வருடங்களாக மக்களின் தொடர்போடு தான் இருக்கிறார். கோவையில் அதிகமான நிகழ்ச்சிகள், தொண்டுகள் பூக்கட்டும் போட்டி முதல் பேஷன் சோ வரை நடத்தி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பாஜகவில் முதன் முதலாக மோடி கிச்சன் ஆரம்பித்தது இவர்தான். இது இவருக்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கண்டிப்பாக பா.ஜ.க எம்.எல். ஏ வாக எதிர்பார்க்கலாம்.