கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் வசித்துவருபவர் மு.ராஜேந்திரன்,இவர் அந்த பகுதியின் திமுக பகுதி கழக செயலாளராக உள்ளார். மளிகை கடைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்டஇனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை விநியோகம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.இவர் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு அங்குள்ள கடைகளுக்கு சில்லைரை விற்பனை செய்து வருகிறார். அவர் மொத்தமாக வாங்கும் பிஸ்கட் மற்றும் சாக்லேட் போன்றவற்றை கோவை புதூரில் வாடகை குடோன் எடுத்து வைத்துள்ளார்.
இந்த குடோனுக்கு மு.ராஜேந்திரன், திமுக பகுதி கழக செயலாளர் மின்சாரத்தை திருடி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் புகார் அளித்துள்ளார்கள். புகாரினை தொடர்ந்து மின்சார வாரியத்தின விஜிலென்ஸ் அதிகாரிகள் ராஜேந்திரனின் குடோனில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் மு.ராஜேந்திரன் மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து மின்சாரத்தை திருடிய ராஜேந்திரனுக்கு 1. 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவர் தான் ஆளும் கட்சி பிரமுகர் என்று வெயிட் காட்டி, இவ்வளவுதான் கட்ட முடியும் என்று வெறும் 12 ஆயிரம் ரூபாய் மட்டும் அபராத தொதையாக கொடுத்துள்ளார்.
சாதாரண மின் நுகர்வோரிடம் தங்களது அதிகாரத்தை காட்டும் மின்வாரிய அதிகாரிகள், திமுக பிரமுகரான ராஜேந்திரன் கொடுத்த சிறு அபராத தொகையை அமைதியாக வாங்கி சென்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















