மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சார்ந்த சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் அக்கிராமத்தில் உள்ள பெண்களை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல பெண்கள் புகாரளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது ஆதாராளர்கள் நில அபகரிப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் இது மம்தாவின் ஆட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளன பெண்களுக்கு நியாயம் வழங்க கோரி சந்தேஷ்காளி கிராம மக்கள், கம்புகளையும், கூர்மையான உழவுக்கருவிகளையும், துடைப்பங்களையும் தூக்கிக்கொண்டு வீதிக்கு வந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்
கடந்த ஜனவரி 5-ம் தேதி பொது விநியோக முறையில் நடந்த முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஷாஜகான் ஷேக் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக, சந்தேஷ்காலி கிராமத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஷாஜகான் ஷேக் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிப்ரவரி 7-ம் தேதி வீதியில் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளர்கள்.
ஷாஜகான் ஷேக்கும், அவருடைய ஆட்களும் சந்தேஷ்காளி கிராமத்திலுள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், குற்றவாளிகள் ஆளுங்கட்சியில் இருக்கும் காரணத்தால், அச்சத்தின் காரணமாக தங்களால் வாய்திறக்க முடியவில்லை என கணீர் மல்க கூறினார்கள். தற்போது, ‘என்ன வந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். சுரண்டலை இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் கூறினர்.
துடைப்பம் ஏந்திச்சென்று ஏராளமான பெண்கள், ‘குற்றவாளி ஷாஜகான் ஷேக்கை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி, உள்ளூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் பெயர் குறிப்பிடாமல் ஊடகங்களிடம் பேசினர். அப்போது, ‘10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துயரங்களை அனுபவித்துவருகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘மீட்டிங்’ என்று சொல்லி வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வார்கள்.எந்தப் பெண்ணாவது அவர்களுக்கு இணங்க மறுத்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்கள்’ என்று அந்தப் பெண்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பெண் டி.ஐ.ஜி ஒருவர் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப்படையை அமைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும், இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கு வங்க டி.ஜி.பி ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.
இதில், முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஷிபா பிரசாத் ஹஜ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு, எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.பிரச்னைக்குரிய கிராமம் அமைந்திருக்கும் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், மார்ச் 7-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறது பாஜக. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிருக்கிறார்.இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் களமிறங்கியிருக்கிறது.