கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் அஹமதாபாத்திற்கு கனடாவிலிருந்தது வந்த அபிமன்யு என்ற தோழர் தனது ட்விட்டர் பக்கத்தில் குஜராத் ஆமதாபாத் விமானநிலையத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனை நடத்தவில்லை என்றும் தனது சுயவிவரங்களை வாங்கி கொண்டு, 14 நாட்களுக்கு சுய தனிமை படுத்திக்கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்தனர் இதுபோன்ற செயல்களால் இந்தியா பெரிய விளைவுகளை சந்திக்க போகிறது என பதிவிட்டிருந்தார்.
அதுவும் இந்த ட்விட்டரை குஜராத் ஆமதாபாத் விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார். இதனை கண்ட அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம் அதிரடியாக ஒரு வீடியோவ வெளியிட்டது அந்த வீடியோ பதிவில் விமான நிலையத்தில் நடைபெற்ற கொரோன குறித்த சோதனைகளின் cctv பதிவுகள் ஆகும். அந்த பதிவில் விமான நிலையத்தில் கொரோனா குறித்த பரிசோதனைகள் நடைபெறுவதையும் அதில் அபிமன்யுவும் கொரோனா பரிசோதனை செய்த cctv பதிவை வெளியிட்டு அபிமன்யுவிற்கு கண்டனம் தெரிவித்தது.
அதை கண்டதோழர் அபிமன்யு தனக்கு நடந்தது கண் பரிசோதனை என தான் நினைத்ததாகவும், தவறுக்கு வருந்துவதாகவும் கூறி முழுப்பி ட்விட் பதிவிட்டார், சரி இந்தியவை கேவலப்படுத்த முயற்சித்த இந்த நபர் யார் என்று தேடினால் இடது சாரி சிந்தனை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அவரது டுவிட்டர் கணக்கில் கேள்விகேட்க துவங்கினர் இதனால் தனது டுவிட்டர் கணக்கை முடி விட்டு செய்து ஓடி ஒளிந்துள்ளார் அபிமன்யு.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கொரோன வைரஸை பரப்பிய சீனாவும், அதன் கிளை நாடு கியூபாவும் சிறந்து விளங்குவதாகவும் இந்தியா இந்த நாடுகளை கண்டு கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கம்யூனிஸ தோழர்கள் சிந்தனையாளர்கள் கூறிவரும் நிலையில் இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.