விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் செருப்பை தலையில் தூக்கி வைத்த சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் பட்டியலின சமூகத்தை தவறாக சித்தரித்து பதிவிட்ட திண்டுக்கல் லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி சார்பில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
புரட்சி பாரதம் கட்சியின் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூவை ஆறுமுகம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் ..
தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சமூகத்தில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்துகொண்டிருக்கும் சமூகத்தை திட்டமிட்டு களங்கப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செருப்பை தலையில் தூக்கி வைத்து சென்ற சமூகத்தை மேயர் ஆக்கியது முதல்வர் ஸ்டாலின் தான் என்று பேசி இருந்தார்,
ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை இந்திய அரசியல் சாசன மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது தற்போது முதல்வர் தான் அதைக் கொண்டு வந்தார் என்பது போல பேசி பட்டியல் இன மக்களுக்கு வழங்கிவரும் இட ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தி பேசியும் வன்முறையை தூண்டும் வகையில் கெட்ட நோக்கத்தோடு சாதிய வன்மத்தோடு பேசிய திண்டுக்கல் லியோனி மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.