மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவிய நிலையில்,நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 43 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். 43 அமைச்சர்களில் தமிழக பாஜக முன்னாள்தலைவர் எல்.முருகனும் ஒருவர். தமிழகத்தில் இருந்து தற்போது 3 பேர் தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நேற்று முன்தினம் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். மத்திய அமைச்சர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில் சுவாரசியம் என்னவென்றால் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களின் பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதில், கொங்குநாடு என்று இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
தற்போது கொங்கு நாடு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. திமுக கொஞ்சம் கதிகலங்கிதான் உள்ளது. திமுக அரசு பதவியேற்றத்திலிருந்து மத்திய அரசினை ஒன்றிய அரசு என கூறிவருகிறது. தமிழக செய்தி தொடர்பு துறையும் அவ்வாறே குறிப்பிட்டு செய்திகளை வெளியிடுகிறது. பாட நூலில் மத்திய அரசு நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என குறிப்பிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொங்கு நாடு குறித்து தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது பாஜகவினர் இல்லாத ஒரு நாட்டை, முருகன் உருவாக்க பார்க்கிறாரா; மத்திய அரசும் ஏற்று கொள்கிறதா? முருகன், சட்டம் தெரியாத சாதாரண நபர் அல்ல. நேற்று வரை கூட, அவர் சாதாரண மனிதராக இருந்துஇருக்கலாம். இன்று அரசியல் சட்டப்படி மத்திய அமைச்சர். அவரது சுயவிபர குறிப்பில், ‘கொங்கு நாடு’ எனக் குறிப்பிட்டிருப்பது, பிரிவினைவாதத்தின் உச்சம் என புலம்ப ஆரம்பித்து விட்டார்.
வழக்கத்தில் இல்லாத ஒன்று ஒன்றிய அரசு அதை மட்டும் திமுக எவ்வாறு சொல்லலாம் என மறு கேள்வி கேட்கிறது பா.ஜ.க இது குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில்நாமக்கல் பகுதி கொங்கு நாட்டுக்குள் வருவதால், அதை, ‘கொங்கு நாடு’ எனக் குறிப்பிட்டிருக்கலாம். மற்றபடி, கொங்கு என்ற சொல் அழகான தமிழ் சொல். அந்த வகையிலும், கொங்கு நாடு என, சுயவிபர குறிப்பில் இடம் பெற வைத்திருக்கலாம்.
ஒன்றியம் என்ற சொல்லுக்கு பிரிவினைவாத உள்நோக்கம் இருக்கிறது என்றால், அந்த சொல்லுக்குள் உள்நோக்கம் இல்லை’ என, தி.மு.க. சொல்கிறது. அதுபோலவே, கொங்கு நாடு என்ற சொல்லாடலுக்கு பின்னணியில், உள்நோக்கம் எதுவும் கிடையாது. கொங்கு என்றால் சுவையானது என்றும் பொருள். தமிழ் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். என கூறியுள்ளார்!