தற்போது இந்திய சீனா எல்லை இடையேயான எல்லை பிரச்சனை நடைபெற்றுவருகிறது. இதை வைத்து ஏதாவைத்து அரசியல் பண்ணிவிடலாம் என காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ராகுல் காந்தியும் முட்டாள்தனமான அறிக்கைகைளை விடுகிறார்.
இந்த நிலையில் 2008 ல் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது குடும்பத்தினருடன் பெய்ஜிங்கிற்கு சென்ற போது , காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறது. கையெழுத்து போடுபவர் ராகுல் காந்தி அவர் பின் சோனியா மற்றும் ஆனந்த் சர்மா நிற்கிறார்கள். சீனா தரப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை தலைவர் கையொப்பம் இடுகிறார். அவர் பின்னால் நிற்பது தற்போதுள்ள சீனா அதிபர்.
ஒரு நாட்டின் அரசு மற்றொரு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கட்சி சீனாவில் இருக்கும் ஆளும் கட்சியுடன் ஒப்பந்தம் போடுவது எதற்காக இது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவேண்டும் அவ்வாறு விளக்கம் அளிக்காவிட்டால் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி தேசிய புலனாய்வு விசாரிக்க வேண்டும். அதில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என மஹேஷ் ஜெத்மலானி உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
இது சம்பந்தமாக பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.நட்டா “2008இல் காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of understanding) ஒன்றை கையெழுத்திடுகிறது. அதையடுத்து, 2010 – 13 காலக்கட்டத்தில் லடாக் பகுதியில் 640 சதுர கிமீ பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமிக்க விடுகிறது காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு. டோக்லம் பிரச்சினையின் போது, சீன தூதுவரை ரகசியமாக சந்தித்து உரையாடுகிறார் ராகுல். இக்கட்டான சூழ்நிலைகளில் நாட்டை பிளவுபடுத்தும் விதத்தில் பேசுவதுடன், இராணுவத்தை சோர்வடைய செய்யும் வகையில் பேசுகிறார் ராகுல். இது தான் உங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவா?” என்று தனது சுட்டுரை மூலம் ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















