தெலுங்கானாவில் `நிரந்தர முதல்வர்’ என்ற மிதப்பிலிருந்த கே.சி.ஆரை தோற்கடித்து, தெலங்கானாவில் முதல்வராக இருப்பவர் ரேவந்த் ரெட்டி. மேலும் ரேவந்த் ரெட்டி என்ற ஒற்றை மனிதன் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்தார். அவரது தேர்தல் வியூகங்களைப் புகழ்ந்து தள்ளியதோடு, முதல்வர் அரியணையையும் வழங்கிச் சிறப்பித்தது காங்கிரஸ் தலைமை.
ரேவந்த் ரெட்டியின் அரசியல் பயணம் தொடங்கியது என்னவோ RSS-ன் மாணவர் அணியாக ABVP-ல் இருந்துதான். இந்தநிலையில் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, `குஜராத் மாடலை’ புகழ்ந்து பேசியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! தெலங்கானாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரதமரையும், குஜராத் மாடலையும் தூக்கிப்பிடித்துப் பேசியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி.
அதிலாபாத்தில், பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், மாநில முதல்வர் ரேவந்த்தும் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய ரேவந்த், `பிரதமர் என்றால்
பேடண்ணா’ (பெரியண்ணன்). பிரதமர் உதவி செய்தால் மட்டுமே முதல்வர்கள் மாநிலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். `குஜராத் மாடல்’ வளர்ச்சியைப்போல, தெலங்கானாவும் வளர்ச்சி பெற வேண்டும். பிரதமரின் ஐந்து ட்ரில்லியன் பொருளாதார இலக்கை அடைய, ஐந்து பெருநகரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில், ஹைதராபாத்தும் பங்களிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
எங்களுக்கு மெட்ரோ திட்டங்களில் உதவி செய்யுங்கள். நீங்கள் சபர்மதி நதியை மீட்டுருவாக்கம் செய்ததுபோல், நாங்கள் முசி நதியை மீண்டும் உருவாக்க நினைக்கிறோம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், மத்திய அரசுடன் நான் சண்டையிட நினைக்கவில்லை’’ என்று பேசினார்.ரேவந்த்தின் பேச்சு, காங்கிரஸ் கட்சியை அதிரவைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் ராகுல் காந்தியோ உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும், குஜராத் மாடல் ஒரு மாயை; ஏமாற்று வேலை’ என மேடைக்கு மேடை பேசிவருகின்றனர். ஆனால், அதே குஜராத் மாடலை,
வளர்ச்சி மாடல்’ என காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது, காங்கிரஸுக்குள் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
`அதானிக்காகத்தான் இந்த அரசாங்கமே’ எனத் தொடர்ந்து மோடி அரசை விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. ஆனால் ரேவந்த் ரெட்டியோ, அதானி நிறுவனத்துடன் ரூ.12,400 கோடிக்கான திட்டங்களில் கையெழுத்திட்டிருக் கிறார். ஒப்பந்தம் இறுதியான பிறகு, அதானியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் காங்கிரஸுக்குத் தலைவலியாகவே அமைந்தது.
மேலும் மஹாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே போல, காங்கிரசை தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி உடைத்து விடுவார்’ என, சொல்ல துவங்கி விட்டார், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ். தெலுங்கான காங்கிரசில், ரெட்டிக்கு எதிரானவர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர். மேலும் காங்கிரசை 2017 ஆம் ஆண்டு முதல் தெலுங்கானாவில் காங்கிரசை வளர்த்து வந்த ரேவந்த் ரெட்டி 2021ல் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களால் ஓரங்கட்டப்பட்டார். ரேவேந்த் ரெட்டி அரசியலில் இடையூறு செய்தார்கள். முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என கூறினார்கள் பல இடர்பாடுகளை சந்தித்த வேளையில் பாஜகவில் ரேவந்த் ரெட்டி இணைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது
2021 அப்போது தெலுங்கானா பாஜக தலைவராக இருந்த பண்டி சஞ்சய் குமார் தெலுங்கானாவில் பாஜகவை வளர்ப்பதற்கு ரேவேந்த் ரெட்டி போல் கடுமையாக உழைத்து வந்தார். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பா.ஜ.கவை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார் .அந்த நிலையில் தான் ரேவந்த் ரெட்டி பாஜகவில் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பண்டி சஞ்சய் குமார் ரேவந்த் ரெட்டி வகையை நிராகரித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது..என்ன தான் இருந்தாலும் RSS-ன் மாணவர் ரேவேந்த் ரெட்டிக்கு பாஜக மீது தனி பாசம் இருந்து தான் வருகிறது.