ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக இ்ந்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டர்.
2016ஆம் ஆண்டு ரியோடி ஜெனிவாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு, 1.8 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சாணக்கிய சேனலுக்கு அளித்த பேட்டியில் 2008 ல் சீனாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் பதிவான ரிக்கார்டை விட அதிகமாக உயரம் தாண்டி 2012 ல் உயரம் தாண்டுதலில் இந்திய அளவில் புதிய சாதனை படைத்தேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் 2012 பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற லண்டனுக்கு பாஸ் போர்ட் எடுக்க முடியவில்லை அதனால் என்னால் ஒலிம்பிற்கு செல்ல முடியவில்லை என கூறியுள்ளார். கடைசி வரைக்கும் பாஸ்போர்ட் வந்துரும் என சொல்லி வந்தனர், ஆனால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டனர் என பேட்டியில் கூறியுள்ளார்.
அப்போது இந்தியாவை ஆட்சி செய்தது காங்கிரஸ் மாநிலத்தில் திமுக ஆட்சி அப்பொழுது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தவர் தமிழ் நாட்டை சார்ந்த சிதம்பரம் தான்.
தன்னுடைய மாநிலத்தை சார்ந்த மாரியப்பன் ஒலிம்பிக் ரிக்கார்டை முறியடித்து புதிய நேசனல் ரிக்கார்டை உருவாக்கி இருக்கிறார் என்று தெரிந்தும் அவருக்கு பாஸ்போர்ட் கூட கிடைக்க துணை நிற்காத சிதம்பரம் இப்பொழுது தமிழன் உரிமை என்று பேசிக் கொண்டு இருப்பது தான் காமெடியாக இருக்கிறது.
இவரெல்லாம் அமைச்சராக இருக்க தகு தி இருக்கிறதா? ஒரு கேஸ் சிலிண்டரைசரியான நேரத்தில் அனுப்பி வைக்க முடியாமல் மாதக்கணக்கில் மக்களை அலைய வைத்த கையாலாகாத காங்கிர ஸ் ஆட்சியில் ஒலிம்பிக் போட்டியில் சரியான வீரர்களை எப்படி அனுப்பி இருப்பார்கள்.?
2016 ல் மோடி ஆட்சியில் அதே மாரியப்ப ன் பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பி க் போட்டியில் தங்கம் பெற்று வந்து இருக்கிறார். 2017ஆம் ஆண்டு மாரியப்பன் தங்கவேலுவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
அதே ஆண்டில், அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 30 லட்ச ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15 லட்சம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை இந்தியா இப்பொழுது உலக அளவில் விளையாட்டு போட்டிகளில் ஜொலிக்க அரசியல் தலையீடு இல்லாமல் திறமையானவர்களை தேடுகிறார்கள்.