மே 18, உலக தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத நாள்.
ஆம்.மே 18. 2009ஆம் ஆண்டு பன்னெடுங்காலமாக இலங்கையிலேயே தம் உரிமைக்காக போராடி கொண்டிருந்த தமிழ் இனத்தை அழித்து விட்டோம், வென்றுவிட்டோம் என்று கொக்கரித்த அன்றைய சிங்கள இனவெறி அரசாங்கத்தினுடைய முழக்கத்தை உலகம் கேட்ட நாள் மே 18.
இந்தியாவை அன்று ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கம், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசாங்கம் இந்த இரண்டு அரசுகளும் சேர்ந்து கோடாரிக் காம்பாக மாறி, இலங்கை சிங்கள வெறியர்களுக்கு துணை நின்று, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து, அவர்களுடைய உரிமைகளை அழித்து, வென்றுவிட்டோம் என்று முழக்கம் செய்த அந்த மே18ம் நாளை ஒரு தமிழனும் மறக்கமாட்டான். மறக்கக்கூடாது.
இந்த மே18 நாளிலே தம் உரிமைக்காக போராடி மடிந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் சொந்தங்களுக்கு நம்முடைய அஞ்சலியை செலுத்துகின்றோம். அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கும் அதே நேரத்தில், தமிழ் இனத்தினுடைய முழு உரிமைக்காக தொடர்ந்து நாம் உங்களோடு இருக்கின்றோம், துணிவுடன் இருங்கள் என்ற நம்பிக்கையை நம் தமிழ் சொந்தங்களுக்கு கொடுத்து செயல்படுவோம், வென்று காட்டுவோம்.
இன அழிப்பிற்கு காரணமானவர்களையும், தமிழ் இன துரோகிகளான இந்திய காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்திலே கோடாரி காம்பாக மாறிய திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஒரு காலமும் மன்னிக்க முடியாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு, மடிந்த நம்முடைய தமிழ்ச் சொந்தங்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவோம்!!
வீர வணக்கம்!!
– பொன். இராதாகிருஷ்ணன்