குடியரசு தலைவர் பரிந்துரையில் நியமன உறுப்பினரானது பற்றி தங்களின் கருத்து : சென்ற வாரம் ஒருவர் மூலம் இந்த உறுப்பினர் பதவிக்கு சேர என் விருப்பத்தை கேட்டு நீதித்துறை மற்றும் அரசு சாராத ஒருவர் மூலம் எனக்கு தகவல் வந்தது.
சில வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பளித்ததால் இந்த பதவியா என்ற கேள்விக்கு: முன்னாள் தலைமை நீதிபதியாக எனக்கு கிடைக்கும் தொகையை விட ராஜ்யசபை உறுப்பினராவதால் எனக்கு கிடைக்கவில்லை. சாதகமான தீர்ப்புகளுக்கு கையூட்டாக கேட்டிருந்தால் பெரிதாக கேட்டிருக்க வேண்டும். மேலும், இந்த உறுப்பினர் பதவி மூலம் வரும் சம்பளத்தை சட்டக்கல்லூரிகளின் நூலகங்களை புதுப்பிக்க வழங்கவிருக்கிறேன்.
ரபேல் விமானங்கள் வழக்கில் உறையிலிட்ட விவரங்களை அரசிடமிருந்து பெற்றது பற்றி: ரபேல் போர் விமான விவரங்களை உறையிலிட்டு அரசு தந்தது. அதை ஏற்றோம். உறையிலாடமல் தந்தால் இராணுவ விவரங்கள் பாகிஸ்தான் கைக்கு போகும்.ரபேல் விவரங்களை சாலை பணி டெண்டர் போல கையாள முடியாது. மேலும் 2ஜி வழக்குகளில் (யுபிஏ) உறையிலிட்ட ஆவனங்களை பெற்ற போது இவர்கள் குரலெழுப்பாதது ஏன்? ஷாஹீன்பாக் விவகாரத்தில் கூட உறையிலிட்ட விவரங்களை அரசு தந்தது. இது புதிதல்ல.
அயோத்தி, ஜம்மு காஷ்மீர், ரபேல், நீதிபதி லோயா மரணம் உள்ளிட்ட வழக்குகளில் ‘அரசுக்கு சாதக’மான தீர்ப்பு பற்றி: அந்த வழக்குகள் அனைத்தும் அமர்வுகளால் முடிவெடுக்கப்பட்டவை. அந்த அமர்வுகளில் நானும் ஒருவன். என் தனிப்பட்ட தீர்ப்பு கிடையாது. குற்றம் சாட்டினால் அமர்விலிருக்கும் அத்தனை நீதிபதிகளையும் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும் .
அரை டஜன் நபர்களால் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்த லாபியின் பிடியிலிருந்து வெளிவரும் வரை, நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியாது. அவர்கள் நீதிபதிகளை மிரட்டி வருகிறார்கள். அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால், அந்த வழக்கின் நீதிபதிக்கு அவப்பெயர் தேடித்தருகிறார்கள்.
தீபம் மிஷ்ராவுக்கு எதிராக 2018இல் ஊடகங்களை நான் சந்தித்த போது இவர்களின் டார்லிங் நான். இவர்கள் விருப்பப்படி தீர்ப்பு தரவில்லை என்றால் எதிரி – என்று நிருபரை தெறிக்கவிட்டார்