Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

“திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ்”.. இறங்கி அடித்த வானதி சீனிவாசன்!

Oredesam by Oredesam
January 18, 2025
in செய்திகள், தமிழகம்
0
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை மறைத்த  திமுகவின் பிரிவினை பாதையில் பயணிக்கும் குடும்ப காங்கிரஸ்

vanathi Srinivasan

FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் பயணிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் வானதி சீனிவாசன்.பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில, “இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது. ஜனவரி 15 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிடத்தை திறப்பு விழா நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அந்நிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது. அதுபோலத்தான் அந்நிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகாலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே முடியாது என நினைத்தவர்களுக்கும், ராமர் கோயில் கட்ட விட மாட்டோம் என வாக்குறுதி அளித்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடிதான் அயோத்தி ராமர் கோயில். எவ்வளவு எதிர்த்தும் ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ராகுல் காந்தியும் இணைந்திருக்கிறார்.

மோகன் பாகவத் கூறியதை தேசத் துரோகம் எனக்கூறும் ராகுல் காந்தி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசையும் எதிர்க்கிறோம் என கூறியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி, இன்னொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்பத் திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் சொன்னால் முடியாது என்கிறார்கள். சட்டப்பேரவை மரபு என்று சொல்லி, அரசியலமைப்பு சட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள். ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள்.

இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. அதனால்தான் திமுகவைப்போல மாநில கட்சியாக காங்கிரஸ் சுருங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ், திமுகவின் இந்த இரட்டை வேடத்தை, கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். தக்க நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டம்! இளம்பெண்களுக்கு மாதந்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் ! கலக்கும் வானதி சீனிவாசன்!

குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டம்! இளம்பெண்களுக்கு மாதந்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் ! கலக்கும் வானதி சீனிவாசன்!

September 19, 2021

திமுகவினர் நடத்துவது கார்ப்பரேட் நிறுவனம் தானே வானதி சீனிவாசன் அதிரடி

December 20, 2020
MISSLE

திடீரென இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை! பாகிஸ்தானை நோக்கி வரிசை கட்டிய சம்பவம் ! பாகிஸ்தான் நெஞ்சில் இறங்கிய கத்தி!

May 5, 2025
30 ஆயிரம் கோடி சம்பாத்தித்த முதல்வர் ஸ்டாலினின்  மகனும் மருமகனும்  : ஹெச். ராஜா

30 ஆயிரம் கோடி சம்பாத்தித்த முதல்வர் ஸ்டாலினின் மகனும் மருமகனும் : ஹெச். ராஜா

May 2, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x