உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் தற்பொழுது பிரச்சாரத்தை துவங்கி உள்ள முதல்வர் யோகிஅதித்யநாத் காங்கிரசை கடுமையாக சடிப்பேசினார்.
1, “பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்! நாட்டை சிதைப்பவர்களை (காங்கிரஸை) மக்கள் பொறுத்துக் கொள்ள தேவையில்லை. பாஜகவில் அனைவருக்கும் மரியாதை உண்டு, அனைத்து நம்பிக்கைகளுக்கும் மரியாதை உண்டு.”
2, “இந்த நாட்டை முதலில் சுரண்டியவர்கள் பிரிட்டிஷார். அவர்களையடுத்து காங்கிரஸ். ஶ்ரீ ராமனை நம்பாதவர் நேரு. சாதுக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது இந்திரா. ராம் என்று ஒருவர் கிடையாது என்று சொன்னவர் சோனியா”
3, “நோய், வேலையின்மை, மாஃபியா ஆட்சி, ஊழல் தவிர சமாஜ்வாதி, காங்கிரஸ், பஹுஜன் சமாஜ் கட்சிகள் என்ன தந்தன உத்தரபிரதேசத்துக்கு? பிரதமர் மோதி தலைமையில் அப்பீஸ்மெண்டுக்கு இடமில்லை. 2017க்கு முன் (யோகி முதல்வராகுமுன்) வரை, அமைதிமார்க்கத்தவருக்கு மட்டுமே ரேஷன் கிடைத்தது. இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது”
4, “பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற்று அப்பீஸ்மெண்ட் செய்த அரசு சமாஜ்வாதி அரசு. ராம் பக்தர்கள் மீது தாலிபான்கள் போல துப்பாக்கி சூடு நடத்தியது சமாஜ்வாதி அரசு”குறிப்பு: 2017இல் மொத்த 14 கோடி உபி வாக்களர்களில் 8.67 கோடிப்பேர் செலுத்திய வாக்குகளில் 3.44 கோடி வாக்குகளை பெற்று 312 இடங்களை பிடித்த பாஜக, தன் உறுப்பினர் எண்ணிக்கையை 4 கோடி ஆக்க களத்தில் இருங்கியிருக்கிறது (https://tinyurl.com/22dbxbk4).உ.பி தேர்தலில் அத்தனை கட்சிகளும் அயோத்தி ராம் மந்திரை அடிப்படையாக வைத்தே பிரச்சாரம் செய்யவிருக்கின்றன என்கிறது இண்டியன் எக்ஸ்பிரஸ் (https://tinyurl.com/2mahcr9d) . ஒவைசி ‘ராம் மந்திருக்கு எதிராக’ பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பாஜக தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான “ராம் மந்திர்” திட்ட நிறைவேற்றத்தை / வெற்றியை பேசவிருக்கிறது.
ராம் பக்தர்களை / கரசேவகர்களை சுட்டுக் கொன்ற சமாஜ்வாதியும் “ராம் ராம்” சொல்லித்தான் பிரச்சாரம் செய்யப்போகிறது. “ராம் மந்திர் வேண்டாம், அங்கே பல்கலை கழகம் கட்டுங்கள்” என்று சொன்ன பச்சோந்தி ஆம் ஆத்மி கேஜ்ரிவாலும் ராம் மந்திர் சென்று ராம் லல்லாவை சேவித்து தன் பிரச்சாரத்தை துவங்கவிருக்கிறார்களாம். மாயாவதியும் அதே! “ரா” என்று யாரும் சொன்னாலே “ராம நாமத்தை” சொல்ல வருகிறார்களோ என்று பயந்தது மாரீச்சன். அதே ராம நாமம் மதுரம் அனுமாருக்கு. ஜெய் ஶ்ரீ ராம்! எம்பெருமான் கருணையால் உத்தரபிரதேசத்தில் மீண்டும் தாமரை மலரட்டும்.
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.