பிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைவதற்கான அனுமதி வேண்டும் என பேசியிருந்தார் இது குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு உபி அரசு அனுமதி அளித்தது. வாகனங்கள் குறித்து ஆவணங்களை தருமாறு கேட்டு கொண்டது. இதை எதிர்பார்க்காத பிரியங்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு வாகனங்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தார். இந்த ஆவணங்களை சரிபார்க்கும் போது பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் 3 சக்கரம் இரு சக்கர வாகனங்கள் ஆகும் சில குப்பை லாரிகளும் அடங்குமாம்.
இந்த நிலையில் ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ., அதிதி சிங் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெர்மிட் இல்லாத பஸ்களையும், சிறிய வாகனங்களையும் அனுப்பி, காங்கிரஸ் , தலைமை ‘கொடூரமான நகைச்சுவை’ செய்துள்ளது என தலைமையை வறுத்தெடுத்துள்ளார்.
.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்., அனுப்பிய பஸ்களில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள். அனுப்பப்பட்ட ஆயிரம் பஸ்களின் பட்டியலில், பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை. 297 குப்பை பஸ்கள், 98 ஆட்டோ ரிக் ஷாக்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.
இது ஒரு கொடூரமான நகைச்சுவை. ஒரு பேரழிவின் போது, இதுபோன்ற சிறுபிள்ளைதனமான அரசியல் தேவை தானா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், ‘ராஜஸ்தானின் கோட்டா நகரில், ஆயிரக்கணக்கான உ.பி., மாணவர்கள் சிக்கி தவித்த போது, அங்கு ஏன் பஸ்களை அனுப்பவில்லை. காங்கிரஸ் அரசால், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எல்லையில் கூட அவர்களால் விட முடியவில்லை. யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் அவர்கள் உ.பி. அழைத்து வரப்பட்டனர். இதனை ராஜஸ்தான் முதல்வரும் பாராட்டினார்’ என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















