தமிழக பா.ஜக.தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் பா.ஜ.க தலைவர் அண்ணமலை அவர்கள் செய்தியாளர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி குறித்து கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த அண்ணாமலை : நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து எதிர்க்கட்சிக்கு வேலை கொடுங்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் என்ற கட்சியை தற்போது கிடையாது அந்த கட்சிக்கு தலைவரே கிடையாது. 23 குரூப்பாக காங்கிரஸ் பிரிந்து கிடைக்கின்றது.
காங்கிரஸ் கட்சயின் ஒர்க்கிங் கமிட்டிக்கு 22 வருடமாக தேர்தல் நடக்கவில்லை அதுதான் காங்கிரஸ். குடும்பத்திற்காக தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.திருமணமாகி இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்தேன் இந்தியாவில் இருக்கின்றேன் என்னுடைய மகன் என்னுடைய மகள் அவர்கள்தான் தலைவர்கள் அதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி நடக்கின்றது.
காங்கிரஸ் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது சுதந்திரத்திற்காக ஆரம்பித்த கால காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி என்ன சொன்னார் சுதந்திரம் கிடைத்துவிட்டது காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்றார். காங்கிரஸ் செத்த பாம்பு அதை வைத்து இன்னும் ஒட்டி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் வேலை இல்லாதவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கால் அந்த சமயத்தில் திரைக்கதை வசனம் எழுதி அதை பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். என்றார் அண்ணாமலை அவர்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















