ராஜஸ்தான், பஞ்சாப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் தற்போது அந்த மாநில முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான உட்கட்சிப்பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.
பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு செக் வைக்க சித்துவை கொண்டு வந்து இப்பொழுது பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிக்கு செக் வைத்து விட்டார் ராகுல் காந்தி.ராகுலின் இதுபோன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.அடுத்து சட்டிஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து முடிந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.
காங்கிரஸ் தலைமை அந்தக் கட்சியின் சார்பில் படான் தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ந்து ஐந்து முறை சட்டசபைக்குத் தேர்வான பூபேஷ் பாகெலை முதல்வராகத் தேர்வு செய்தது.
ஆனால், அந்த நேரத்தில் பூபேஷ் பாகெலைத் தவிர்த்து முதல்வர் ரேஸில் அந்த மாநில மூத்த தலைவர்களுள் ஒருவரான டி.எஸ்.சிங் டியோவின் பெயரும் அடிபட்டது.
கட்சியில் பெரும்பான்மை ஆதரவு மற்றும் மக்கள் செல்வாக்கு என்ற இரு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இருவருமே சமபலம் படைத்தவர்களாக இருந்தபோதும், காங்கிரஸ் தலைமை பூபேஷ் பாகெலுக்குத்தான் முதல்வர் வாய்ப்பு வழங்கியது.
ராகுல் காந்தி சுழற்சி முறையில் 2.5 வருடம் முதல்வர் பதவி என பேசி சத்தீஸ்கரில் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல் 2.5 வருடம் முடிந்து விட்டது ஆனால் பஞ்சாயத்து இன்னும் முடிவடையவில்லை
சட்டிஸ்கர் காங்கிரஸ் ஆட்சி கலைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. முதல்வர் பூபேஸ் பாகல் சுகாதார அமைச்சர் சிங்டியோ இடையே 2018 டிசம்பரில் ராகுல் செய்து கொடுத்த ஆளுக்கு 2.5 வருடம் முதல்வர் பதவி பஞ்சாயத்து இன்னும் முடிவடையவில்லை
முதல்வர் பூபேஸ் பாகல் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இல்லை. அதே மாதிரி சிங்டியோவும்முதல்வர் பதவியை பெறாமல் விட போவது இல்லை என்று ராகுலுடன் மல்லுக்கு நிற்கிறார்.
ராகுல் பொறுத்து இருங்கள் உங்களுக்கு முதல்வர் பதவி உறுதி என்று சிங்டியோவுடன் கூறிக்கொண்டு இருக்கிறார். இத னால் சிங்டியோ ஆதரவாளர்கள் அடுத்த முதல்வர் அண்ணன் தான் என்று கலக்கி கொண்டு இருக்க சட்டிஸ்கர் ஆட்சி ஸ்தம்பித்து விட்டது.
பூபேஸ் பாகலுக்கு ஒரு 41 எம்எல்ஏ க்கள் ஆதரவு இருக்கிறது சிங் டியோவுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.யாராவது ஒருவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்பதால் பதவி கிடைக்காதவர் காங்கிரசில் கலகம் செய்ய காத்து இருக்கிறார்.
இப்பொழுது கூட சிங்டியோ குரூப் எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்று பூபேஸ் பாகலை நீக்க வேண்டும் என்று ராகுலிடம் மல்லுக்கு நிற்க கிளம்பி விட்டார்கள். காங்கிரசில் நடைபெறும் கலாட்டாகளை ஆர்வத்துடன் கவனித்து கொண்டு இருக்கிறது. அம்மாநில பாஜக