காங்கிரஸ் மாநில பொது செயலாளரை மேடையில் வைத்து கொண்டு பாதிரியார் திமுகவை தாக்கியது இதற்காகத்தான்! உண்மை வெளிவந்தது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் பாரத மாதா பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் திமுக ஜெயித்தது கிருஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஒரு கிறித்தவ ஆலோசனை கூட்டத்தில் பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னய்யா என்பவர், “பாரதமாதா மிகவும் அசிங்கமானவள் மற்றும் ஆபத்தானவள். அவளை மிதித்தால் நமக்கு சொறி சிரங்கு போன்ற நோய்கள் வந்துவிடும். அதனாலேயே நான் செருப்பு அணிகிறேன். சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு மேலாடையின்றி செல்லும் ஆண்கள் கிறுக்கன்கள்” என பேசி இருக்கிறார்.

கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் பனங்கரையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு அருமனை கிறிஸ்தவ இயக்கத் தலைவா் சி.ஸ்டீபன், அருள்தந்தை ஜாா்ஜ் பொன்னையா ஆகியோா் தலைமை வகித்தனா்.காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கே.ஜி. ரமேஷ்குமாா், மதச்சாா்பற்ற ஜனதாதள நிா்வாகி ஜாண் கிறிஸ்டோபா், எஸ்டிபிஐ நிா்வாகி சுல்பிகா்அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் செய்யதுஅலி, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிா்வாகி நூா்தீன், முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகி காதா் மைதீன், அருமனை பாக்கியபுரம் தேவாலய இணை பங்குத்தந்தை அமல்ராஜ், சிபிஐஎம்எல் கட்சியின் மாவட்டத் தலைவா் அந்தோணிமுத்து உள்ளிட்டோா் பேசினா்

மத போதகர் ஜார்ஜ் பொன்னையா பேசியது தற்செயல் என்றோ,அது உணர்ச்சி வசத்தால் வந்த வார்த்தை என்றோ எடுத்துக்கொள்ள முடியாது.இதுதான் உண்மையான அரசியல் செய்தி,இப்படி பேசாமலே சாதிக்க முடியும் என்று நம்பியிருந்தார்கள். ஆனால் பா.ஜ.கவின் எழுச்சி இன்று அரசியல் களத்தை தோலுரிக்கிறது..இங்கு தி.மு.க வும்,அதிமுகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும்,இது பெரியார் பூமி என்றும் பேசுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை அரசியல் ஜார்ஜ் பொன்னையாவின் குரல்தான்.அவர் ஒரு தனி நபரல்ல,கருத்தியலின் பிரச்சார முகங்களில் ஒன்று அவ்வளவுதான்.

தி.மு.க வினர் எல்லோரும் கோவிலுக்கு போகிறவர்களாக இருந்தும்,நல்ல ஹிந்துக்களாக இருந்தும் அதை மறைக்க வேண்டிய அரசியல் எங்கிருந்து உருவாகிறது என புரிகிறதா? அமைச்சர் சேகர்பாபு,மனோ தங்கராஜ் போன்றவர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பலமுறை சென்றுவிட்டார்கள்.அங்கே பிரசன்னம் பார்க்க அமைச்சரே சென்றார் என்கிற போது,அவர்களின் நம்பிக்கை வீச்சு இவர்களுக்கு புரிகிறது.இப்படி வெளிப்படையாக திமுக அமைச்சர்கள் நடந்துகொள்வதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொண்டது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவின் மாவட்ட தரப்பில் கூட யாரும் வரவில்லை இதன் காரணமாக தான் பாதிரியார் திமுகவை பேசியுள்ளார்.

மேலும் திமுகவினர் முன்பு போல் இல்லாமல் தங்கள் பக்தி உணர்வை வெளிப்படையாக காட்டிக்கொள்கிறார்கள். அதையெல்லாம் இந்த தரப்புகளால் தாங்க முடியவில்லை.இதுதான் நாம் கவனிக்க வேண்டிய இடம். இங்கே திராவிடம்,தமிழ் என இன்னும் லட்சம் வார்த்தைகளின் பின்னே சென்று ஒளிந்து கொள்வது, தமிழன் தன்னை ஹிந்து என்று உணரக் கூடாது என்ற நோக்கத்தினால் மட்டுமே..அதை உணர வைக்கும் அரசியல் இங்கே எழுந்து வருகிற போது ஜார்ஜ் பொன்னையாக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிடுவார்கள். வலது சாரி சிந்தனையாளர்: சுந்தர் ராஜ் சோழன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version