Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்திய பொருளாதாரத்தை அழிக்க சதியா? ராகுல்காந்தியின் துரோகம் ஆதரத்துடன் அம்பலம்! மொசாட் வெளியிட்ட ஆதாரம்!

Oredesam by Oredesam
April 26, 2025
in இந்தியா, செய்திகள்
0
Rahul Gandhi Hindenburg

Rahul Gandhi Hindenburg

FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனங்கள் செயற்கையான முறையில் பங்குகளின் விலையை உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதன் கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கடுமையான குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகளின் விலை அதலபாதளத்துக்கு சென்றது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், அதானி குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னணியில் ராகுலுக்கும் தொடர்பு இருப்பதை ரகசிய விசாரணையின் மூலம் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டுபிடித்துள்ளதாக ஸ்புட்னிக் இந்தியா தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் மற்றும் DEEP STATE தொடர்புடைய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. இதற்காக, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை, ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டதாக, இஸ்ரேல் உளவுத்துறை ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை அதானி குழுமம் இறுதி செய்திருந்தது. புவிசார் அரசியலில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்துக்கான முக்கிய ஒப்பந்தம் இது என்று கூறப்பட்டது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்த நேரத்தில் தான் 2023ம் ஆண்டு ஜனவரியில், ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடிகளில் ஒன்றை அதானி குழுமம் திட்டமிட்டுச் செய்ததாகக் குற்றம் சாட்டி ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே, இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலியான வருவாய் ஈட்டவும், நிதிகளை ஏமாற்றவும், “வாஷ் டிரேடிங்” மூலம் பங்கு விலைகளைக் கையாளவும், அதானி குழுமத்தின் ஷெல் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலுமாக அதானி குழுமம் மறுத்திருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை அதானி குழுமம் இழந்தது.

அதானி குழுமத்தைப் பலவீனப்படுத்தினால், துறைமுக ஒப்பந்தத்தை மட்டுமல்ல, இந்தியாவுடன் சேர்ந்து இஸ்ரேல் கட்டியெழுப்பும் அனைத்து முயற்சிகளும் தடைபடும் என்று இஸ்ரேல் பிரதமர், அதானியிடமே கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மீதான மறைமுக தாக்குதல் என்று விவரித்த நெதன்யாகு தனது நண்பர்களைப் பாதுகாப்பதில் இஸ்ரேல் எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகே, மொஸாட், (Operation Zeppelin)”ஆபரேஷன் செப்பெலின்” என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. ஹிண்டன்பர்க்கின் நிறுவனர் ஆண்டர்சனும் அவரது அலுவலகமும் உடனடியாக கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன. (Tzomet ) ட்ஸோமெட் மற்றும் ( Keshet ) கெஷெட் என்ற இரண்டு பிரிவுகளும் வேகமாக செயல்படத் தொடங்கின.

ஹிண்டன்பர்க் அறிக்கையை ஏற்பாடு செய்த சர்வதேச நெட்வொர்க்கை கண்காணித்து யார், யார், அதன் பின்னணியில் உள்ளனர் என்பதை மொசாட் கண்டுபிடித்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் பின்னணியில், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஹெட்ஜ் நிதிகள்,பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரிய நெட்வொர்க் இருந்ததை மொசாட் சுட்டிக்காட்டியது. அவர்களில் பலர், பைடன் நிர்வாகம், அமெரிக்க உளவுத்துறை சமூகம் மற்றும் கோடீஸ்வர நிதியாளர் ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சாம் பிட்ரோடா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் ஹிண்டன்பர்க் அறிக்கை சதியில் ஈடுபட்டுள்ளதை மொசாட் ஆதாரங்களுடன் கண்டுப்பிடித்தது. சாம் பிட்ரோடாவின் தனிப்பட்டசர்வர்களை மொசாட் ஹேக் செய்து பார்த்ததில், ராகுல் காந்தி உட்பட பல இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் ஹிண்டன்பர்க் அறிக்கையுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என்ற ஆதாரங்களையும் மொசாட் கண்டுபிடித்துள்ளது.

மொசாட்டின் உள் கோப்புகளில் “கசப்பான வம்சவாதி” என்று குறிப்பிடப்படும் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் அதானிக்கும் களங்கம் விளைவிக்கத் திட்டம் திட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக, 2023ம் ஆண்டு மே மாதம், அமெரிக்க சென்ற ராகுல் காந்தி, கலிபோர்னியாவின் Palo Alto-வில், ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தயாரித்த நபர்களைச் சந்தித்ததாகவும், தொடர்ந்து நியூயார்க்கில் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சனைத் தனியாகச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு அப்பால் ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மொசாட் இதுகுறித்து ரகசிய விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க ராகுல் காந்தி சதி திட்டம் தீட்டியதை, 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டு அனுப்பிய மின்னஞ்சலையும் மொசாட் கைப்பற்றியுள்ளது.

353 பக்கங்கள் தொகுக்கப்பட்ட (“Operation Zeppelin”) ஆபரேஷன் செப்பெலின் ஆவணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (OCCRP) மற்றும் மேற்கத்திய ஊடகங்களுக்குள் உள்ள தொடர்புகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அதானியின் உலகளாவிய வளர்ச்சியையும், இந்திய- இஸ்ரேல் நல்லுறவைக் கெடுப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களுடன் ஆவணத்தின் சில பகுதிகளை மொசாட் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், பிரெஞ்சு ஊடகமான மீடியாபார்ட் மட்டுமே மொசாட்டின் ஆவணத்துடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.

மொசாட்டின் ஆபரேஷன் செப்பெலின் ஆவணங்கள், இந்தியாவுக்கு எதிராக, ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் போன்ற பிற இந்திய எதிர்ப்பு நெட்வொர்க்குகளுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படுவது அரசியல் போட்டியின் தார்மீக எல்லைகளை மீறியதைக் காட்டுகிறது.

எந்த அரசியல் லட்சியமும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஒருவரின் சொந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது. மொசாட்டின் ஆபரேஷன் செப்பெலின் ஆவணங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ராகுல் காந்தி செய்தது தேசத்துரோகம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தற்குறி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்” – எச்.ராஜா செருப்படி பதில்!

September 24, 2020
அண்ணாமலை!

பொய் சொல்லி சிக்கிய தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு! ஆதாரங்களோடு இறங்கி அடித்த அண்ணாமலை! பதிவை நீக்கிய சன் நியூஸ்!

February 23, 2024

“பாஜக மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை தகர்த்தெறிகின்றன” – கதறுகிறார் சீன அடிமை யெச்சுரி… காரணம்?

May 8, 2020
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் ஒரு கிறுஸ்தவர் Dr.VK ஜான் ! இதுதான் பா.ஜ.க!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் ஒரு கிறுஸ்தவர் Dr.VK ஜான் ! இதுதான் பா.ஜ.க!

July 20, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x