1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் இந்துக்கள் வழிபடு நடத்தி வந்துள்ளனர் அப்போது எந்த தடையும் இருக்கவில்லை பின சில ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து மசூதி அமைத்து தொழுகை நடத்தி வந்துள்ளனர். இதனால் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை உருவானது. 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத இந்த வழக்கு நவம்பர் 09, 2019 முடிவுக்கு வந்தது.
பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம்தான் என்பதை இஸ்லாமிய அமைப்புகளால் நிரூபிக்க இயலவில்லை. இதனால் அந்த இடம் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் இராமர் கோயில் கட்டும் பணிகளை கண்காணிப்பதற்காகவும் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இதனை தொடர்ந்து அயோத்தி ராமர் பிறந்த இடம் ராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, மார்ச் மாதம் நடந்தது. கொரோனா பரவலால், பணிகளை தொடர முடியாமல் போனது. இரு மாதங்கள் கழிந்த நிலையில், 11ம் தேதி, மண் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது, ஐந்து அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் கடவுள் சிலைகள், சிற்பத்துாண்கள் ஆகியவை, உடைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டன. மண் தோண்டும் பணி முடிந்ததையடுத்து, கட்டுமான பணிகள் நேற்று துவங்கின. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதே தினத்தில் தான் பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறக்கட்டளையின் தலைவர், மகந்த் நிரித்யா கோபால் தாஸ், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்து, பணிகளை துவக்கி வைத்தார். அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர், சத்யேந்திர தாஸ் கூறியதாவது:அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு, பல தரப்பிலிருந்தும், நிதி வந்துள்ளது. அதனால், கோவில் கட்டுவதில், நிதி ஒரு பிரச்னையாகவே இருக்காது. மக்கள் அளிக்கும் நிதியில், இதுவரை எங்கும் பார்த்திராத வகையில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















