தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும்” – உலக செவிலியர் தினத்தன்று விடியல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள்.
தற்போது தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று போராடி வருகின்றார்கள். விடியல் அரசோ செவிலியர்களை காவல்துறையினரைக் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறது விடியல் அரசு. இதை பற்றி எந்த ஊடகமும் செய்திகள் வெளியிடவில்லை என்பது மற்றொரு அம்சம்.
கொரோனா கலகட்டத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்ற தன்னுயிர்பணையமாக வைத்து பணியாற்றியவர்கள் செவிலியர்கள் ஆனால் அவர்களை தற்போது காவல்துறை வைத்து அடக்கியிருக்கிறது விடியல் அரசு.
கொரோனா பணிக்காக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மூன்று கட்டங்களாக, தற்காலிக செவிலியர்கள் நியமனம் நடந்தது. `தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடியல் அரசு பொறுப்பேற்றது தற்கால செவிலியர்கள் பணி நியமனம் குறித்து ஏதும் பேசாமல் இருந்தது. இதனை தொடர்ந்து 3,485 செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினரை ஏவியது விடியல் அரசு . காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் செவிலியர்களை பேசியுள்ளார்கள்.சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் மீடியாக்களில் வந்துவிடக் கூடாது என்பதற்காக மீடியாக்களை அனுமதிக்கவில்லை என்று குமுறுகின்றனர்
இந்த நிலையில் தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என்றும், இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.
இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















