கடலூர் மாவட்டம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகளை துணை ராணுவம்,போலீஸ் பலத்த பாதுகாப்புடன் விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த இருதினமாக கல்லூரிக்குச் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியின் முன்பு வெகு நேரமாக கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்ததால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கிருந்த தி.மு.கவினர் ஏதோ அசம்பாவிதம் நக்கபோகின்றது என்கிற ரீதியில் தி.மு.க மற்றும் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அங்கு குவிந்தனர்.
பின்னர் தங்கள் பீதியடைந்தது பத்தாது என காவல்துறையினரையும் அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தி.மு.கவினரின் பயத்தை கண்டு காவல்துறையினர் விசாரிக்க துவங்கினர்.
விசாரித்து பார்த்ததில், திருப்பூரிலிருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி என்றும், லாரி ஓட்டுநர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்கு செல்வதற்காக லாரியை நிறுத்தியதாகதெரியவந்தது.
பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில், கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் அங்கிருந்து எடுத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தேங்காய் நார் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் வண்டியை strong room க்கு 2.km தொலைவில் உள்ள ஒரு வீட்டருகில் நிறுத்தி தண்ணீர் வாங்கி குடித்துள்ளார் டிரைவர்.உடனே #கன்டெய்னர்_கதறல்_கோஷ்டீஸ் அதிகாரிகளை கூப்பிட்டு கன்டெய்னரை திறந்து இது தேங்காய் நார் இல்லை, EVM ஐ கனெக்ட் செய்யக்கூடிய ரஷ்யன் இம்போர்டட் ஃபைபர் சரியாக செக் பண்ணுங்கள் என்று கோரிக்கை வைத்து ரகளையில் ஈடுபட்டனர்.ஏமாத்தவே முடியாது.இது பெரியார் மண்
திமுகவினர் பயத்தில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் விதவிதமாக யோசித்து திரிகின்றனர்.